For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு - வெங்கையா நாயுடு, மோடி, சுஷ்மா, ஈபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்

சிறந்த சமூக சிந்தனையுடன்கூடிய ஆன்மீகவாதியை பாரதம் இழந்திருக்கிறது என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் | Oneindia Tamil

    காஞ்சிபுரம்: காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை ஜெயேந்திரர் காலமானார். அவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் எஸ்.வி சேகர் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளனர்.

    வெங்கையா நாயுடு இரங்கல்

    ஜெயேந்திரர் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆன்மா மோச்சமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். சிறந்த ஆன்மீகவாதியான ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மோடி இரங்கல்

    சங்கராச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜகத்குரு பூஜ்யாஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சமூக சேவைகள் செய்துள்ளார். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் பல நிறுவனங்களை நிறுவினார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

    ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை

    காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மத்திய அமைச்சர் இரங்கல்

    இன்று காலை மஹாசமாதி அடைந்த பரம் பூஜ்ய ஸ்வாமி ஜெயேந்திர சரஸ்வதிக்கு மரியாதை செலுத்துகிறேன். அவருடைய ஆசீர்வாதங்களை என்றென்றும் மக்களுக்கு கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

    மனவேதனை தருகிறது

    மரியாதைக்குரிய பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் இன்று சமாதி நிலை அடைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அவரது ஆன்மா நற்கதியடைய லட்சக்கணக்கான பக்தர்களுடன் நானும் எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

    முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

    ஜெயேந்திரர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். காஞ்சி மடத்தின் பீடாதிபதி திரு.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    அதிர்ச்சி தருகிறது

    மரியாதைக்குரிய காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன்கூடிய ஆன்மீகவாதியை பாரதம்இழந்திருக்கிறது பாரதியஜனதா சார்பில் அவரின்பக்தர்களுக்கு ஆறுதலையும் அனுதாங்களையும் தெரிவித்து எங்களது அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்....

    அதிர்ச்சி தரும் மரணம்

    காஞ்சி பெரியவர் ஶ்ரீ ஜெயேந்திரர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி. ஈடு செய்ய முடியாத இழப்பு என்று எஸ்.வி சேகர் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Shankaracharya Jayendra Saraswathi, the 69th pontiff of the Kanchi Mutt, died on Wedneday. His body is kept at the mutt for public view.I pay my respects to Kanchi peethadhipathi Shri Jayendra Saraswati who attained moksha said Venkaiya Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X