For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக குதிரை பேரம்.. பிரதமர் மோடி விசாரணை நடத்த காங் கோரிக்கை

கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ. 15 கோடிக்கு பேரம் பேசிய எடியூரப்பா மகன்-வீடியோ

    சென்னை: கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது. இதையடுத்து எண்ணிக்கை அடிப்படையில் எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    Congress demands PM to take action against Horse trading

    மேலும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி உச்சநீதிமன்றத்தை நாடியது.

    எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே ஒரு நாள் மட்டுமே நேரம் வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் முயற்சித்தனர்.

    104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் பாஜக மூத்த தலைவர்களோ எங்களுக்கு 120 பேர் ஆதரவு தெரிவிப்பர் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா, அவரது மகன் ஆகியோர் பணம், அமைச்சர் பதவி ஆசை காட்டி மூளை சலவை செய்த ஆடியோ காட்சிகளை காங்கிரஸ் செய்தி சேனலில் வெளியிட்டது.

    இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி முடியாமல் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    Congress demands Prime Minister to take action against Hoese trading done by BJP in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X