For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் இருந்து விஜயதாரணி வெளியேற்றம்

சட்டசபையில் இருந்து குமரி மாவட்ட எம் எல் ஏ விஜயதாரணி வெளியேற்றப்பட்டார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு!-வீடியோ

    சென்னை : சட்டசபையில் சபாநாயகர் அனுமதி மறுத்த பிறகும் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், குமரி மாவட்ட எம் எல் ஏ விஜயதாரணியை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அப்போது, குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதாரணி குமரி மாவட்ட பிரச்னைகளை எழுப்ப முயன்றார்.

    Congress MLA Vijayadharani expelled from TN Assembly

    அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், தொடர்ந்து விஜயதாரணி கேள்வி எழுப்பினார். இதனால், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி விஜயதாரணியை சபையில் இருந்து சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார்.

    சபாநாயகரின் உத்தரவை அடுத்து அவைக் காவலர்கள் அவரை வெளியேற்றினர். அப்போது அவர் பேசுகையில், ஒரு பெண் உறுப்பினர் என்றும் பாராமல் சபாநாயகர் என்னை வெளியேற்ற உத்தரவிட்டது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அவைக் காவலர்கள் தன்னிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகவும் விஜயதாரணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    English summary
    Congress MLA Vijayadharani expelled from TN Assembly. Earlier in today's assembly session Vijayadharani raised questions on Government and Speaker ordered to expel her from assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X