For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை: காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு தொகுதியை தக்கவைப்பாரா?

By Mayura Akilan
|

நெல்லை: திருநெல்வேலி லோக்சபா தொகுதி சிட்டிங் எம்.பி.யான ராமசுப்புவை மீண்டும் நெல்லை நாடாளு மன்ற தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ராமசுப்பு 11-2-1950 ம் ஆண்டு பிறந்தவர்.

Congress re-nominated for S.S.Ramasubbu in Tirunelveli LS seat

இவரது மனைவி மின்னல்கொடி, மகள் சுபத்ரா. விவசாயம் மற்றும் கிரஷர் ஆலை தொழில் செய்து வரும் ராமசுப்பு. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

மாணவர் காங்கிரஸ் நெல்லை மாவட்ட செயலாளராக 1971 ம் ஆண்டு பொறுப்பு வகித்த இவர் தனியார் வங்கியில் காசாளர், உதவி மேலாளர் என பணியாற்றியவர்.

1989 மற்றும் 1991ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல்களில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2009 ம் ஆண்டு திருநெல்வேலி லோக்சபா தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றார். சிட்டிங் எம்.பியான இவருக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி ஆதரவில் வெற்றி பெற்ற இவர் இம்முறை தனித்து களமிறங்குகிறார் வெற்றி வாய்ப்பினை மீண்டும் நெல்லை வாக்காளர்கள் வழங்குவார்களா?

English summary
AICC party has re-nominated sitting MP Ramasubbu from Tirunelveli constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X