For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோட்டீஸ் விநியோகித்தால் தேசதுரோக வழக்கா? பீட்டர் அல்போன்ஸ் பாய்ச்சல்

நோட்டீஸ் விநியோகித்தால் தேசதுரோக வழக்கு போடுவதா? என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சாடியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பூர்: நோட்டீஸ் விநியோகம் செய்ததற்கெல்லாம் தேசத் துரோக வாக்கு பாயும் என்றால், இது எடிப்பாடி பழனிச்சாமி அரசா அல்லது இடிஅமீன் அரசா என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூரில் சமூக நல்லிணக்க கருத்தரங்கக் கூட்டம் நடந்தது. அதில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

 Congress senior leader criticized Edappdi government as Idi Amin government

அக்கூட்டத்தில் உரையாற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக அமைச்சர்கள் தினம் தினம் ஆளுக்கொரு கருத்துக்களைக் கூறி மக்களை குழப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அரசை விமர்சித்தால் தேசத் துரோக வழக்கு போடப்படும் என்ற நிலை உருவானால் அது ஜனநாயகத்துக்கு பேரழிவு. பிரதமர் மோடியையோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசையோ எதிர்த்து துண்டறிக்கை வெளியிட்டால் தேசத்துரோக வழக்குப் பாயும் எனில் இது எடப்பாடி அரசா அல்லது இடி அமீன் அரசா? என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார்.

சேலத்தில் தினகரன் அணியினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்டதகக் கூறி தினகரன் மற்றும் அவரது அணியினர் 36 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In Tamilnadu ruling party going very arrogant criticized congress senior leader Peter Alphonse in Thiruppur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X