For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு- காங்கிரஸ் 'ஷாக்' - திருநாவுக்கரசருக்கு ராகுல் 'டோஸ்'

மூன்றாவது அணி முயற்சிக்கு திமுக ஆதரவு அளித்திருப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    மமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு- காங்கிரஸ் ஷாக்

    சென்னை: மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் திமுகவின் இந்த முடிவுக்கு திருநாவுக்கரசரின் வெளிப்படையான விமர்சனங்களே காரணம் என கூறி அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசு தலைவர் ஆன சில மாதங்களிலிருந்தே திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் விழத்துவங்கியது. இதற்கு காரணம், கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை திருநாவுக்கரசர் பேசிவந்ததுதான்.

    அண்மைக்காலமாக இந்த விரிசல் விரிவடைந்தே வருகிறது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றும் முயற்சியில் பாஜக தலைமையும் இன்னொரு பக்கம் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்தநிலையில், பாஜக-காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

    கனிமொழி விளக்கம்

    கனிமொழி விளக்கம்

    இந்த அணியில் திமுகவை கொண்டு வர விரும்பி டெல்லியில் கனிமொழியை சந்தித்துப் பேசினார் மமதா. ஆனால் கனிமொழியோ, கூட்டணி விவகாரமெல்லாம் கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும். உங்கள் கோரிக்கையை கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவிக்கிறேன் என்று பட்டும்படாமல் கூறியிருந்தார்.

    பதில் தராத ஸ்டாலின்

    பதில் தராத ஸ்டாலின்

    இதன்படி, சென்னை திரும்பியதுமே, ஸ்டாலினிடம் மமதாவின் கோரிக்கையையும், கருணாநிதியை சந்திக்க அவர் விரும்பியதையும் விவரித்திருந்தார் கனிமொழி. பாஜக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை தந்த தகவல்களுக்கு எப்படி க்ரீன் சிக்னல் தராமல் ஸ்டாலின் காலம் கடத்தி வந்தாரோ, அதேபோல மமதாவின் கோரிக்கைக்கும் எவ்வித சிக்னலையும் தராமல் காலத்தைக் கடத்தி வந்தார்.

    மமதாவுக்கு ஸ்டாலின் ஆதரவு

    மமதாவுக்கு ஸ்டாலின் ஆதரவு

    இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு திமுக எப்போதும் ஆதரவளிக்கும். பாஜகவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மமதாவின் முயற்சியை பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் திடீரென பதிவிட்டார். இந்த பதிவு தமிழக அரசியலில் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் ஷாக்

    காங்கிரஸ் தலைவர் ஷாக்

    குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்கள் இந்த ட்விட்டர் பதிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கூட்டணியிலிருந்து காங்கிரசை கழட்டிவிட, ஸ்டாலின் முடிவு செய்துவிட்டாரா? ' என காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொண்டு விவாதிக்கொள்கிறார்கள்.

    திருநாவுக்கரசை கண்டித்த ராகுல்

    திருநாவுக்கரசை கண்டித்த ராகுல்

    இந்த நிலையில், ராகுல் அழைத்ததன்பேரில் டெல்லிக்கு விரைந்தார் திருநாவுக்கரசர். அந்த சந்திப்பில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து திருநாவுக்கரசர் பேசி வருவதாக தனக்கு வரும் புகார்களைச் சுட்டிக்காட்டி திருநாவுக்கரசரை ராகுல் கடிந்துகொண்டாதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Sources said that Congress leaders are shocking over the DMK Working President MK Stalin's support to West Bengal CM Mamata for Third Front.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X