For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரச்சாரகளத்தில் திராவிட கட்சிகள் போல் “பின்னி பெடலெடுக்கும்” காங்கிரஸ் கட்சி

|

சென்னை: நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் சுறுசுறுப்பான பிரச்சார களத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியானது, உங்களுக்கு நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என்று உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ,இந்த கட்சிகள் ஒருவருக்கு ஒருவரை "கழுவி கழுவி ஊத்திக்கொள்ள" தயங்குவதே இல்லை.

தனித்து போரிடும் காங்கிரஸ்:

தனித்து போரிடும் காங்கிரஸ்:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே எப்பொழுதும் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு இந்த தேர்தல் நீண்ட இடை வெளிக்கு பிறகு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.

வரிசையாக குற்றச்சாட்டு:

வரிசையாக குற்றச்சாட்டு:

தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் அரசு மீது எல்லா வகையான கட்சிகளும் வரிசையாக குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன.

சளைத்தவர்கள் நாங்கள் அல்ல:

சளைத்தவர்கள் நாங்கள் அல்ல:

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரசை கடுமையாக விமர்சிக்கின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தில் திமுக, அதிமுகவை கடுமையாக போட்டு தாக்குகின்றனர்.

மாத்தி,மாத்தி குற்றச்சாட்டு:

மாத்தி,மாத்தி குற்றச்சாட்டு:

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மறைக்கின்றனர் என்று தமிழக அரசு மீது காங்கிரசார் எதிர் பிரசாரம் செய்கின்றனர்.

உற்சாகம் குறையா காங்கிரஸ் தொண்டர்கள்:

உற்சாகம் குறையா காங்கிரஸ் தொண்டர்கள்:

தமிழக் கட்சிகளுக்கு இணையாக காங்கிரஸ் தொண்டர்களும் பிரசார களத்தில் உற்சாகமாக ஓடுகிறார்கள். வேட்பாளர்களுக்கு முன்பு தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியின் கொடியை பிடித்து மோட்டார்சைக்கிளில் அணி வகுத்து ஊர்வலமாக செல்கின்றனர்.

சூடு பிடிக்கிது பிரச்சாரம்:

சூடு பிடிக்கிது பிரச்சாரம்:

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேளதாளம் மற்றும் இசை கச்சேரியுடன் பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்களா இவர்கள் என்று மக்களே வியப்படையும் வகையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

சாதனைகளின் பட்டியல்:

சாதனைகளின் பட்டியல்:

ஏழை , எளிய மக்களுக்கு மத்திய அரசு செய்த சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் காங்கிரஸ் தொண்டர்கள் இப்போது பிரசாரம் செய்து வருகின்றனர்.

நிரூபிப்போம் எங்கள் பலத்தை:

நிரூபிப்போம் எங்கள் பலத்தை:

தனித்து போட்டியிடுவது மூலம் காங்கிரசின் உண்மையான பலம் என்ன என்பதை இந்த தேர்தல் வெளிக்காட்டும் என்பதால் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், முன்னாள், இன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் தங்கள் முழு பலத்தையும் காட்டுகிறார்கள்.

வீடு வீடாக ஓட்டு கேட்கும் காங்கிரஸ்:

வீடு வீடாக ஓட்டு கேட்கும் காங்கிரஸ்:

வெற்றி , தோல்வியை பற்றி கவலைப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை அனைத்து தொகுதிகளிலும் பெற வேண்டும் என்ற இலக்குடன் வீடு வீடாக ஓட்டு சேகரிக்கின்றனர்.

நெருப்பு படுக்கை:

நெருப்பு படுக்கை:

தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த தேர்தல் பலப்பரீட்சையாக கருதப்படுகிறது.

களப்பணியில் தீவிரம்:

களப்பணியில் தீவிரம்:

தேர்தலில் வெற்றியே இலக்காக இருந்தாலும் திராவிட கட்சிகளுக்கு இணையாக காங்கிரசும் களத்தில் சமமாக களப்பணி செய்து வருகின்றது.

தோல்வி நிலையென நினைத்தால்:

தோல்வி நிலையென நினைத்தால்:

வீதிகளில் தேர்தல் பணியை கூட்டாக சேர்ந்து செய்த காங்கிரஸ் தொண்டர்கள் இப்போது தனியாக செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு புதிதாக இருந்தாலும் மனதில் நல்ல நம்பிக்கையை விதைத்துள்ளது.

English summary
congress party involved in election campaign with high spirit. volunteers meet the election first time as single handed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X