திருநங்கைகளுக்கு 3% இட ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழகத்தில் 3328 திருநங்களுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் கல்வி வேலை வாய்ப்பில் அவர்கள் பயன்பெற முடியும் என்று வாதிட்டார். மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள இந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடம் வழங்கினால் அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படாது. வெறும் அடையாள அட்டை மட்டும் அவர்களின் வயிற்றை நிறைக்காது என்றும் தனது வாதத்தில் முன் வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14ல் திருநங்கைகளுக்கு பல வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. ஆனால், இது வெறும் ஏட்டளவில்தான் உள்ளது என்றும் அவர்களை பெண் என்றோ அல்லது மாற்றுப்பாலினம் என்றோ அழைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர்.
திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை தமிழக சமூக நலத்துறை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து 6 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications