For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இந்தி மொழி இல்லாத நவோதயா பள்ளிகளை துவங்க வேண்டும்.. ஜெ.வுக்கு நுகர்வோர் சங்கம் கோரிக்கை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஓர் பள்ளி வீதம் 32 நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவங்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், கல்வியமைச்சருக்கும், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதன் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் தமது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளிக் கல்வித் திட்டத்தை தமிழகத்திலும் அறிமுகம் செய்வதற்கான ஒரு முன்மொழிவினை சமர்ப்பிக்கின்றோம்.

Consumer Association to request the jayalalithaa to start Navodaya school in tn

மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டம் 1986ம் ஆண்டு மஹாராஸ்டிரா மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளி தொடங்கப்பட்டது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தமிழ்நாடு தவிர எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதிஉதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளி கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்த பள்ளிகூடங்களை அமைக்க தமிழகஅரசு மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் இந்த பள்ளகளில் இந்தி ஒருபாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த காரணத்தால்தான் இந்த பள்ளிகூடங்கள் தமிழகத்தில் இல்லை. இந்த பள்ளிகூடங்கள் முதலில் மேற்கு வங்களாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் நிறுவப்படவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்காளம் இந்த பள்ளிகளை நிறுவ அனுமதிஅளித்துள்ளது. தற்போது இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த பள்ளிகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தற்போது இல்லை.

தமிழ்நாடு அரசு இந்தி பாடதிட்டம் உள்ள மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள 37 கேந்திரிய வித்யாலயா அமைக்க தமிழக அரசு ஒப்புதல் கொடுத்து தமிழகத்தில் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் போது ஏன் நவோதயா பள்ளிக்ளுக்கு அனுமதி கொடுக்ககூடாது. இரு பள்ளிகளில் ஒரே பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட கொண்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணக்கார குழந்தைகள் படிக்கும் போது ஏழை குழந்தைகள் நல்ல தரமான கல்வி பயிலும் நவோதயா பள்ளிக்கு ஏன் அனுமதி அளிக்க கூடாது. பணகாரர்கள் இந்தி படிக்கலாம் ஏழைகள் இந்தி படிக்க கூடாது என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது போன்று உள்ளது.

மத்திய பாடதிட்ட தனியார் பள்ளிகள்:-

தமிழகத்தில் தற்போது மொத்தம் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 580 மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை பின்பற்றும் பள்ளி கூடங்கள் இயங்கிவருகிறது. இதில் அதிக அளவு தனியார் பள்ளிகூடங்கள் ஆகும். இந்த கல்விநிறுவனங்கள் அமைக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. தனியார் பள்ளிகூடங்களில் இந்தி மொழிபயிற்றுவிக்கும்போது மத்திய அரசு இலவசமாக மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு வேண்டி 32 பள்ளிகூடங்கள் அமைக்க தமிழக அரசு ஏன் அனுமதி அளிக்க கூடாது. தமிழகத்தில் 2010-ம் ஆண்டில் மத்திய கல்விவாரியத்தின் பாடதிட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் வெறும் 250 மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது கடந்த ஐந்து வருடங்களில் இது அதிக அளவு அதிகரித்து 580 ஆக உள்ளது. தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மத்திய கல்விவாரியத்தின் பாடதிட்டத்தை பின்பற்ற வேண்டி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்த பள்ளிகள் அமைக்க தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் கொடுத்த அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகள் இந்தி மொழிபயிற்றுவிக்கும் பள்ளிகள் கணக்கிலாமல் துவங்க அனுமதிஅளிக்கும் தமிழக அரசு மத்திய அரசின் இலவசமாக 32 பள்ளிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்கட்டாயம்:

தற்போது தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 37 கேந்திரவித்தியாலையா பள்ளிகளை தவிர அனைத்து பாடதிட்டத்ஙகளை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழ் கண்டிப்பாக ஒரு மொழிபாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்றி அமுல்படுத்தி செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழ்மொழி எந்த ஒருவிதத்திலும் பாதிக்காது என்பது குறிப்பிடதக்கது.

இந்திய அரசின் அலுவல்மொழிசட்டம் 1976:

மத்திய அரசின் இந்தியை பிராதனபடுத்தும் அலுவல்மொழிசட்டம் 1976 தமிகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். தமிழகத்துக்கு இந்த சட்டம் செல்லுபடி ஆகாது. ஆகவே மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழகத்துக்கு என சிறப்பு அந்தஸ்து இந்த சட்டம் மூலமாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளதை போன்று மத்திய கல்வி வாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை தமிழகத்தில் பயன்படுத்த முடியாது. தமிழகத்துக்கு என தனியாக இந்தி மொழி இல்லாத மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை அமுல்படுத்தலாம்.

தமிழக அரசு இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி பயிற்றுவிப்பதை தடைசெய்யலாம். இவ்வாறு இந்த அலுவல் மொழிசட்டத்தை பயன்படுத்தி இந்தி மொழி இல்லாத மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்த்தில் துவங்க அனுமதி அளிக்கலாம். இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு அந்த பள்ளிகனை துவங்க தடை செய்வது ஏழை மாணவ மாணவிகளை மிகவும் பாதிக்கும் செயல் ஆகும். இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் தற்போது உள்ள மத்திய கல்வி வாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை பின்பற்றி வரும் தனியார் பள்ளி கூடங்களிலும் இந்தி பயிற்றுவிப்பதை தடை செய்யலாம்.

நவோதயா பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்

1. இந்த நவோதயா பள்ளிகள் அந்த அந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதுடன் மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்படும்.

2. மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனி, தனி விடுதிகளில் தங்கி பயிலும் மத்திய கல்வி வாரிய (CBSC Syllabus) முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

3. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் அவர்கட்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றது.

4. மாணவ, மாணவியர்கள் பொது நுழைவு தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலே, 6ம் வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

5. இந்த பள்ளிகளில் இந்தி மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10ம் வகுப்பு இறுதி பரிட்சைக்கு இந்தி கட்டாயம் இல்லை.

6. தேசிய அளவு அனுபவம் பெற விரும்பும் சில மாணவ, மாணவியர்கள் வேறு மாநிலத்திலும் ஒரு வருடம் தங்கி பயிலும் வாய்ப்புகள் உண்டு. இத்திட்டத்தால் தமிழ்மொழி அனைத்து மாநிலத்தில் பரவ வழிவகை ஏற்படும்.

7. இப்பள்ளிகளில் கல்வியுடன், விளையாட்டு, கலை, கைவினை, கணனி கல்வி, நாட்டுப்புற கலைகள் போன்ற நுண்கலைகளும் தினசரி பிற்பகல், மாலை வேளைகளில் நன்கு கற்பிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் அனைத்து துறைகளிலும் முழு பரிமானம் பெற்று சிறந்த மாணவர்களாக மாறி வருகின்றனர்.

8. ஒரு மாவட்டத்தில் ஒரு பள்ளி, கட்ட மத்திய அரசு ரூ 20 கோடி வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கட்டுமான பணிக்கும், ரூ.2.5 கோடி ஆண்டு பள்ளிக் கல்வி ஒரு ஆண்டு செலவிற்கும் திட்ட மதிப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

9. தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமை, நவீன கல்விமயமாக்குதல், இயல், இசை, நாடகம், கலைகள், போட்டிதன்மை வளர்த்தல், சமூகசேவை, புதுமைக்கு பயிற்சி போன்றவைகளில் நவோதயா பள்ளிகள் இந்தியாவிலே மிகவும் தலை சிறந்த பள்ளியாக உள்ளது.

10. இந்த பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர் கொண்ட 2 பிரிவுகளாக, வகுப்பிற்கு 80 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இவர்களில் 33% மகளிர், தாழ்த்தப்பட்டோர் , 15% மலைஜாதியினர் 7.5% ஆகும். அது போன்று கிராமப்புற மாணவ, மாணவியர் 75% இதர பிரிவினர் 24% மாணவ, மாணவிகளாக இந்த பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

11. நாட்டின் சில பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் வெளிநாட்டில் மாற்று (Exchange Programme)பயிற்சிக்கு சென்று கல்வி பயில வாய்ப்பு உள்ளது.

12. இப்பள்ளிகளில் பயின்ற ஏராளமான மாணவர்கள் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களாகிய இந்தியா தொழில் நுட்ப நிறுவனம் (IIT), .இந்திய மேலாண்மை (IIM), இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (AIMS) போன்றவற்றிலும் படித்து முதலிடம் பிடித்து சாதனை படைக்கின்றனர்.

13. நவோதயா பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் பல இந்திய ஆட்சிபணியிலும் (IAS) இன்னும் அநேக மத்திய அரசின் உயர் பதவிகளிலும் பலர் பணியாற்றுகின்றனர்.

14. இப்பள்ளிகள் ஒரு உதாரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் அமைய இருப்பதால், மாவட்டத்தின் மற்ற எல்லா பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் இப்பள்ளிக்கு வந்து பயிற்சியும் பெற்று மாணவர்கள் பயன் பெறலாம்.

15. இப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் பள்ளியிலே தங்கி கல்வி கற்பதால் மாணவர்களின் பெற்றோருக்கும் மாணவர்களின் படிப்பு பற்றிய கவலையும், எந்தவிதமான சிரமமும் இல்லாமல் இருப்பார்கள் மாணவர்களும் நன்றாக படிப்பார்கள்.

16. இந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அகிய இந்திய தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவதால் திறனும், அனுபவமும், ஆற்றலும் உடைய நாடு தழுவிய அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் பள்ளி முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நல்ல தரமான கல்வியும், பயிற்சியும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

17. ஏராளமான மாநில, தேசிய போட்டிகளில் இப்பள்ளி பங்கேற்று திறமை, தன்னம்பிக்கை, அனுபவம் பெற நல்ல வாய்ப்புகள் பெற்றுள்ளார்கள்.

18. நவோதயா பள்ளிகள் இந்தியாவிலேயே சிறந்த கல்வி கொடுப்பதால் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் ஆண்டுதோறும் தேர்வு முடிவுகளில் இந்த பள்ளி மாணவர்கள் முதலிடத்திலும், இதர மத்திய, மாநில அரசு பள்ளிகளை விட 10 சதவீதம் கூடுதல் தேர்ச்சியும் பெறுகின்றனர்.

19. நவோதயா பள்ளிகளில் சேர நடக்கும் தேர்வு, மாணவர்கள் படித்த அவர்களது தாய்மொழியிலே கூட எழுத்து பரிட்சை எழுதலாம்.

20. நவோதயா பள்ளி ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாட்டில் அமைத்தால் ஒரே நேரத்தில் ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் பயில முடியும், சுமார் 40 ஆசிரியர்கள், 20 ஊழியர்கள் வேலை செய்ய வாய்ப்பும் கிடைக்கும்.

21. தமிழகத்தில் நவோதயா பள்ளி வர அனுமதிக்காததால் ஏற்பட்ட இழப்பு ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி கட்டுமான நிதி x 30 மாவட்டம் என 600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

22. ஒரு பள்ளியில் ஆண்டு செலவிற்குரிய 2.5 கோடி x 30 மாவட்டம் 70 கோடி ஆண்டிற்கு இழப்பு ஏற்படுகின்றது.

23. 1986ல் முதல் 2016ம் ஆண்டு வரை 70 கோடி x 30 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த பள்ளி அமைக்கப்படாத காரணத்தினால் தமிழகத்திற்கு 2100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

24. ஒரு பள்ளியில் 560 மாணவ, மாணவியர் x 30 மாவட்டம் ஆக ஆண்டிற்கு 16,800 மாணவ, மாணவியர் இலவசமாக தங்கி படிக்கும் வாய்ப்பும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

25. 30 மாவட்டங்களில் 600 கோடி ரூபாய் செலவில் உள்ள கட்டுமான பொருட்கள் வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

26. 600க்கு மேல் உள்ள மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, மற்றும் எல்லா பொருட்களும் விற்கும் வாய்ப்பு வியாபாரிகள் இதுவரை இழந்துள்ளனர்.

27. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படும் கல்வி மறுமலர்ச்சி புத்துணர்வு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை போக்க தமிழ்நாட்டில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வழங்கியது போன்று உடனடியாக, மத்திய அரசின் நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா விதியாலயா பள்ளி உடன் துவங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம் என தமது கோரிக்கை மனுவில் நுகர்வோர் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

English summary
Consumer Association to request the chief minister jayalalithaa to start Navodaya school in tamilndu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X