For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணீர் விட்டு... மூக்கை சிந்தும் சீரியல்களுக்கு எப்பத்தான் முடிவு வருமோ?#tvserial

மூக்கை சிந்தி கண்ணீர் விட்டு அழும் சீரியல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காலம் காலமாக கண்ணீர் விட்டு அழுவது, மூக்கை சிந்தி முந்தானையில் துடைப்பது போன்ற சீரியல்களுக்கு முடிவு கட்டிவிட்டு நல்ல சீரியல்களை ஒளிபரப்புங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் டிவி சீரியல் ரசிகர்கள்.

சேட்டிலைட் சேனர்களில் தினசரியும் நூற்றுக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றில் பல சீரியல்கள் அடுத்தவர் குடியை கெடுப்பதுதான். திருமணமான ஆண்களை காதலிப்பது போலவும் அதிக அளவில் சீரியல்கள் எடுக்கின்றனர்.

மனைவியுடன் வாழும் ஆணை எப்படி மடக்குவது போன்ற ஐடியாக்கள் கற்றுத்தருகின்றன. இல்லாவிட்டால் பில்லி, சூனியம், செய்வினை என மூட நம்பிக்கைகளை அதிகரிக்கும் சீரியல்கள், பேய் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.

குல நாச சீரியல்கள்

குல நாச சீரியல்கள்

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் பல சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றில் பல சீரியல்கள் இருதார திருமணத்தை ஆதரிப்பது போலவே எடுக்கப்படுகின்றன. கல்யாணப்பரிசு, நந்தினி ஆகிய சீரியல்களில் இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஆண் வசிப்பது தவறில்லை என்பது போன்றே ஒளிபரப்பாகின்றன.

ஏங்கும் பெண்கள்

ஏங்கும் பெண்கள்

திருமணமான ஆணை எப்படியாவது கவிழ்த்து அந்த பெண்ணை விரட்டி விட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது போன்றே சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. நந்தினி சீரியலில் கங்காவை இரண்டாம் தாரமாக அருண் திருமணம் செய்து கொண்ட பின்னரும் சீதாவிற்கு தாலி கட்டுகிறான். அத்தை மகள் மாயாவும் அருண் மீது ஆசைப்படுகிறான்.

அழுகாச்சி சீரியல்கள்

அழுகாச்சி சீரியல்கள்

இன்னொரு பக்கம் குலதெய்வம் சீரியல், குடும்பத்தை கெடுப்பது எப்படி என்று ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர் பெண்கள். வடிவுக்கரசிக்கு கண்ணீர் விட்டு மூக்கை சிந்தி முந்தானையில் துடைப்பதுதான் வேலையாகி விட்டது.

ஆயிரம் எபிசோடுகள் அழுகை

ஆயிரம் எபிசோடுகள் அழுகை

குடும்பத்தை நாசமாக்குவது எப்படி என்று தெய்வமகளும், வாணி ராணியும் கற்றுக்கொடுக்கின்றன. இது அதிகம் வியூவர்ஸ் பார்க்கும் சீரியல்கள் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் சீரியல்கள். எப்படா இந்த சீரியல்கள் முடியும் என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

ட்டிரெண்டை மாத்துங்கப்பா

ட்டிரெண்டை மாத்துங்கப்பா

இதுபோன்ற சீரியல்களை நிறுத்துங்கள் என்று சீரியல் ரசிகர்கள் புகார்களை குவித்து வருகின்றனர். சமீபத்திய ட்ரெண்டுகளுக்கு ஏற்ப சீரியல்களை மாற்றுங்கள் என்றும் கேட்கின்றனர். ஆனால் சீரியல் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் திருந்தியபாடில்லை.

English summary
Television viewers complaints were related to stereotyping of women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X