For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாமக்கல் காவிரியாற்றில் கவிழ்ந்த லாரி.. இருக்கையில் அமர்ந்தபடியே இறந்த டிரைவர்!

நாமக்கல் காவிரியாற்று பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் இருக்கையில் அமர்ந்தபடியே டிரைவர் உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நாமக்கல்: பவானி குமாரபாளையம் காவிரியாற்று பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் இருக்கையில் அமர்ந்தபடியே டிரைவர் உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையிலிருந்து, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள பவானி காவிரி ஆற்று பாலத்தின் மீது கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது தடுப்பு சுவரை உடைத்து கொண்டு லாரி ஆற்றில் கவிழ்ந்தது. லாரியின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி லாரி ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகின்றது.

7 மணி நேரம் பாதுகாப்பு

7 மணி நேரம் பாதுகாப்பு

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கண்டெய்னர் லாரி மீட்கப்பட்டுள்ளது.

இருக்கையில் அமர்ந்தபடியே

இருக்கையில் அமர்ந்தபடியே

லாரி ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடியே ஓட்டுநர் உயிர்விட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்தவர்

திருச்சியை சேர்ந்தவர்

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் லாரி ஓட்டுனர் திருச்சியை சேர்ந்த சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது.

நீரின் அளவு குறைந்தது

நீரின் அளவு குறைந்தது

சென்னையில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் சிவக்குமார் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. காவிரியாற்றில் செல்லும் நீரின் அளவு குறைந்ததால் லாரி மீட்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Container Lorry fell into Cauvery river. Driver dead in lorry itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X