For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்தையூர் தடுப்புச் சுவர் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றமான சூழல்!

மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் இடித்ததால் பதற்றம் நிலவுகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சந்தையூர் தீண்டாமைச் சுவர் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றமான சூழல்!

    மதுரை: மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் இரு பிரிவு இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு பிரிவினர் தங்களின் கோவிலைச் சுற்றி தடுப்புச் சுவர் ஒன்றை கட்டிஎழுப்பியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    Controversial wall in Santhaiyur slightly damaged creates sensitivity

    தடுப்புச் சுவரை அகற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பிரிவு மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலைச் சுற்றி தடுப்புச் சுவர் தான் கட்டப்பட்டுள்ளதாக சுவர் கட்டியுள்ள பிரிவினர் கூறி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பிரிவினர் இது தீண்டாமைச் சுவர் என்று கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சுவரை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சுவரில் உள்ள இரண்டு அடுக்கு செங்கற்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பேரையூர் காவல் அதிகாரிகள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது யாரோ ஒரு நபர் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர், அதற்குள் அந்த மர்மநபர் தப்பியோடியிள்ளார். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The controversial wall in Santhaiyur near Peraiyur was partially damaged, two rows of bricks were demolished on one side of the compound wall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X