For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் திருநங்கைகளுக்கு... திண்டுக்கல்லில் பிறமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள்

Google Oneindia Tamil News

திருச்சி/ திண்டுக்கல்: திருச்சியில் திருநங்கைகளுக்கும் திண்டுக்கல்லில் பிற மாநில தொழிலாளர்களுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் உணவுப் பொருட்களை வழங்கின.

லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் அறம் மக்கள் நலச்சங்கம் சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி அண்ணாநகா் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் அத்தியாவசிய பொருள்கள் இல்லாமல் தவித்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அறம் மக்கள் நல சங்கம் சாா்பில், புதன்கிழமை நேரில் சென்று உதவிகள் வழங்கப்பட்டன.

Coronavirus: NGOs distribute Rice to migrant workers in Trichy, Dindigul

திருநங்கைகள் அனைவருக்கும், நிதி உதவியுடன், ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசிய பொருள்களை அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவா் சு .ராஜா, பொதுச்செயலாளா் எஸ்.ஆா்.கே. ரமேஷ்குமாா் ஆகியோா் இணைந்து வழங்கினா்.

Coronavirus: NGOs distribute Rice to migrant workers in Trichy, Dindigul

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை

திண்டுக்கல்லில் அமைதி அறக்கட்டளை சார்பாக செட்டிநாயக்கன்பட்டி தனியார் நூற்பாலையில் பணிபுரியும் இடம் பெயர்ந்த வடமாநில ஒடிஷா தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பாக வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மற்றும் கைகளை 20 வினாடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பதை பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. மேலும் வேடசந்தூர் உள்ளிட்ட இடங்களில் பிற மாநில தொழிலாளர்களுக்கு அரிசு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அமைதி அறக்கட்டளையினர் வழங்கினர்.

கொரோனா.. அந்த 6 நாட்கள்.. மக்களிடம் உண்மைகளை மறைத்த சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்! கொரோனா.. அந்த 6 நாட்கள்.. மக்களிடம் உண்மைகளை மறைத்த சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

English summary
NGOs distributed Rice and food item to migrant workers and Transgenders in Trichy and Dindigul Dists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X