For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்சக்கட்ட பரபரப்பில் இன்று கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.... அச்சத்தில் அமைச்சர்கள்? - வீடியோ

தமிழகத்தில் பல்வேறு குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடபாட்டி பழனிச்சாமி தலைமையில் கூடுகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடுகிறது. இக்கூட்டத்தில் எதிர்வரும் சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, புதிய திட்டங்கள், மசோதாக்கள் குறித்த ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.

தமிழக சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டம் நாளையிலிருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Council of ministers meet today held in chennai.

அதிமுக எடப்பாடி அணி, ஒபிஎஸ் அணி, தினகரன் அணி என திசைக்கொரு அணி உள்ள நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளது .

இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக எதிர்கட்சிகளை சமாளிப்பது, எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கு தகுந்த பதில் அளிப்பது குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

மேலும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிளப்பியுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கோடியாக லஞ்சம், கொத்துகொத்தாக தங்கம் பிரச்சனை மக்களை உச்சக்கட்ட கோபத்தில் வைத்துள்ள நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டமும், அடுத்து வரும் 24 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரும் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Council of ministers meet today held in chennai. And facing opposite party, Dmk will be the main agenda of the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X