For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமுருகன் காந்தியின் நீதிமன்ற காவல் ஆக.9 வரை நீட்டிப்பு

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்டு மாதம் 9ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரின் காவல் ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

Court extends custody to Thirumurugan Ganthi till Aug. 9

இதற்கு போலீசர் திடீர் தடையை விதித்தனர். இறந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது தங்கள் கடமை என்று கூறி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்குச் சென்று அஞ்சலி செலுத்த முயன்றனர். அப்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் குமார் ஆகிய 4 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் 4 பேருக்கும் வரும் 9ம் தேதி வரை காவல் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Court extended custody to Thirumurugan Gandhi and 3 till August 9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X