For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றவாளிகளை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது... சங்கரின் மனைவி கவுசல்யா பேட்டி!

கணவர் சங்கரை கொலை செய்த குற்றவாளிகளைத் தான் தற்போது நீதிமன்றமும் குற்றவாளி என்று அறிவித்துள்ளதாக கவுசல்யா கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- வீடியோ

    திருப்பூர் : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளைத் தான் குற்றவாளி என்று கூறியுள்ளதாக கவுசல்யா கூறியுள்ளார்.

    கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி மாணவியான கவுசல்யா, தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி சங்கரை நடு ரோட்டில் வைத்து வெட்டினர். இந்தக் கொடூர தாக்குதலில் சங்கர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், கவுசல்யா ஆபத்தான கட்டத்தை கடந்து உயிர் பிழைத்தார்.

    Court said whoever is accuste, i will say my opinion afet full judgement came : Shankar's wife Kousalya

    தமிழகத்தையே அதிர வைத்த இந்த ஆணவக் கொலைக்கான ஆதாரங்கள் அருகில் இருந்த சிசடிவி காட்சிகள் மூலம் கிடைத்தது. கணவர் கொல்லப்பட்ட நிலையில் கவுசல்யா தொடர்ந்து கணவரின் வீட்டிலேயே வசித்து வருகிறார். தனது கணவரின் குடும்பத்தாரை அவர் தான் பார்த்துக் கொள்கிறார்.

    இந்நிலையில் சங்கர் கொலை வழக்கில் இன்று நீதிமன்றம் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட 11 பேரை குற்றவாளிகள் என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கவுசல்யா குற்றவாளிகளைத் தான் நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லி இருக்கிறது. முழு தீர்ப்பு வந்ததும் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Shankar's wife Kousalya says that court is announced that whoever is the accuste in my husband killing case, i will say my views about this after full judgement came she added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X