For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊரே கொண்டாடிய மாடு மலை தாண்டும் விநோத விழா - வீடியோ

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டியில் மாடு மலைதாண்டும் விழா என்ற விநோத திருவிழா நடைபெற்றது. அதில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

By Suganthi
Google Oneindia Tamil News

கரூர்: அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டி என்ற ஊரில் மாடு மலை தாண்டும் விழா என்கிற விநோத நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தற்போது அந்த விழா அங்கு கோலாகலமாக நடைபெற்றது.

மாடு மலை தாண்டும் விழா என்ற விநோதத் திருவிழா பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டி என்ற ஊரில் நடைபெற்று வருகிறது.

cow race festival was celebrated in kurumpapatti village

இந்தத் திருவிழாவில் போட்டியில் பங்கேற்கும் மாடுகள் கழுத்தில் மாலை இடப்பட்டு, அவை போட்டி நடக்கவுள்ள மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அழைத்து செல்லப்படும். பின்பு அங்கிருந்து அவிழ்த்து விடப்படும். மாடுடன், மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வர வேண்டும்.

எந்த மாடு முதலில் வருகிறதோ அதற்கு வாழைப் பழம், பூ, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்படும். இந்த விழா தற்போது குரும்பப்பட்டியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதில் 300 மாடுகள் பங்கேற்றன. இது கௌரவத்துக்காக நடத்தப்படும் விழா என அவ்வூர் பொதுமக்கள் கூறினர்.

English summary
Near Arvakurichi, a different cow running festival was held and nearly 300 cows participated in this festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X