For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்... சென்னையில் போராடிய ஜி.ரா கைது!

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மணாவ அமைப்பினர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, மாணவர் அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது : நீட் அவசர சட்டத்தில் விலக்கு வாங்க மாநில அரசுக்கு துப்பு இல்லை.

G.Ramakrishnan arrested

கடைசியாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓர் ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். இதன் உறுதியை ஏற்று அரசு அவசரச் சட்டதை கொண்டு வந்தது, உயிரிழந்த மத்திய அமைச்சர் விலக்கு அளிக்கப்படும் என்றார், ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் தமிழகத்திற்கு மட்டும் விலக்க அளிக்க முடியாது என்றார்.
ஏழை மாணவி உச்சநீதிமன்றம் கைவிரித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள். மத்திய, மாநில அரசை கண்டித்து மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி அவசர சட்டம் கொண்டு வர் வேண்டும். இதனை வலியுறுத்தியே தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மாணவர்களை பாதுகாப்பதற்காக வாதாட வேண்டிய அரசு அணிகள் இணைப்பில் மட்டுமே கவனம் செலுத்திய கையாளாகாத தனத்தால் தான் மாணவி அனிதா உயிரிழந்தார். மாநில அரசு இனியும் தொடர எந்த அறுகதையும் இல்லை என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலுசார் கைது செய்தனர். இதேபோன்று அண்ணா சாலை அஞ்சல்நிலையம் பகுதியில் 1 மணி நேரமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாணவர் அமைப்பு பங்கேற்றுள்ளனர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

English summary
G.Ramakrishnan accuses centre and state for Anitha's sudden death for this demand only CPM and students federation organising protests all around tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X