For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏமாற்றம் தரும் மத்திய பட்ஜெட்... முத்தரசன் கருத்து!

மத்திய அரசின் பட்ஜெட் ஏமற்றத்தையே அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் 2018-19, தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ

    நாகப்பட்டினம் : பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கருப்பு பணத்தை மீட்போம் அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் எற வாக்குறுதி என்ன ஆனது. அதே போல் விவசாயத்தை வரும் 2022 ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என அறிவித்துள்ளனர்.கடந்த 2014 நாடளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் அறிவித்த விவசாயத்தை இரட்டிப்பு ஆக்கும் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு உள்ளது.

    CPI State Secretary Mutharasan says budget not satisfactory

    கடந்த தேர்தல் வாக்குறுதியை அடுத்த தேர்தல் வந்து அதில் வெற்றி பெற்றால் அப்போது விவசாயத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என கூறியிறுப்பது விவசாயிகளை ஏமாற்றுகின்ற வஞ்சிக்கின்ற அறிவிப்பை கொடுத்துள்ளனர். இயற்கை சீற்றங்களால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்டும் என காத்திருந்த நிலையில் அதுவும் இல்லாதது ஏமாற்றமே.

    விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க போராடி வரும் சூழலில் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பால் எதுவும் நடந்து விடாது. மேலும் வழக்கம் போல் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 5% வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
    மொத்ததில் மத்திய அரசின் இன்றைய பட்ஜெட் அறிக்கை என்பது மிகுந்த எதிபார்ப்புகள் மத்தியில் ஏமாற்றத்தையே அளிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    English summary
    CPI state Secretary Mutharasan says that the Union Budget 2018 is not satisfactory as the assurances given by BJP government in their election is not fullfilled as it is the last budget in their ruling.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X