For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையைக் கூட்டாமல் இருப்பது நல்லதல்ல- மார்க்சிஸ்ட் சவுந்திரராஜன் காட்டம்

Google Oneindia Tamil News

நெல்லை: மக்கள் பிரச்சனை குறித்து பேச சட்டசபையைக் கூட்டாமல் இருப்பது நல்லதல்ல என மாக்சிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் காட்டமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் எல்லா துறையிலும் பின்னுக்கு செ்ன்று கொண்டிருக்கிறது. 500 உள்ளாட்சி பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. உயர் கல்வி அனைத்தும் தனியார் வசம் உள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீதம் மட்டுமே அரசு கல்லூரிகள் ஆகும். 80 சதவீத இ்ன்ஜனியரிங் பட்டதாரிகளுககு வேலை இல்லை.

CPM condemns TN govt for not convening Assembly session

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகம் உயர் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது என மகிழ்ச்சி அடைந்து எந்த வித பயனும் இல்லை. தமிழகத்தில் மின் தேவையை அதிகரிக்க திட்டங்களும் இலலை. வெளி மாநிலத்தில் இருநது அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதுதான் சாதனையாக உளளது. இந்த மின்சாரம் தெ்ாடர்ச்சியாக கிடைக்காது.

மின்சாரம் சரியாக இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.25 லட்சம் தொழி்ற்சாலைகள் மூடப்பட்டுளளன. தமிழகத்தில் சட்டம் ஓழு்ங்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சீர்கேடு அடைந்துள்ளது.

தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்த பேச வேணடியுள்ளது. ஆனால் சட்டமன்றத்தை கூட்டாமல் எப்படி பேச முடியும். இந்த ஆண்டு 12 நாள் மட்டம் தான் சட்டமன்றம் நடந்துள்ளது. ஒவ்வொரு துறையின் விவாதம் குறித்து பேச 45 நாட்கள் சட்டமன்றம் நடந்திருக்க வேண்டும்.

மக்கள் பிரச்சனைகள் எதிரொலிக்கும் என்பதால் சட்டமன்றத்தை கூட்டாமல் ஓத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் அதி்முக ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் அதிமுகவுடன் கூ்ட்டணி சேராது. தேர்தலுககு இன்னும் அதிக காலம் உள்ளது என்றார் அவர்.

English summary
CPM MLA Soundararajan has condemned the TN govt for not convening Assembly session
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X