For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை நடுக்குப்பம் பகுதியில் 'சுதந்திரமான' விசாரணை நடத்த வேண்டும்: பிரகாஷ் காரத்

வன்முறையில் சூறையாடப்பட்ட நடுக்குப்பம் மீன்மார்க்கெட் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். அப்போது வன்முறைக்குள்ளான நடுக்குப்பம் பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என

Google Oneindia Tamil News

சென்னை: நடுக்குப்பம் பகுதியை இன்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் அப்பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சென்னை நடுக்குப்பத்தில் காடந்த 23ஆம் தேதி போராட்டக்காரர்களை கலைப்பதாக கூறி காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஊர்திகள் தீக்கிரையாக்கப்பட்டன.

CPM leaders visited the Nadukuppam area in Chennai

அங்கிருந்த மீன் மார்க்கெட்டும் சூறையாடப்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்வர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாகவும், பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் போலீசாரே வாகனங்கள் மற்றும குடியிருப்புகளுக்கு தீ வைப்பது மற்றும் கடைகளை சூறையாடியது உள்ளிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வன்முறை வெறியாட்டத்துக்குள்ளான நடுக்குப்பம் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வன்முறைக்குள்ளான நடுக்குப்பம் பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வன்முறைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பட்டட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசினார்.

English summary
CPM leaders visited the Nadukkuppam area in Chennai where the Violence happened on 23rd of this month. CPM senior leader Prakash Karat urges to take action on the Policw who are all having connection in this violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X