For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுக்கு 15 எம்எல்ஏக்கள் கிடைச்சிருப்பாங்க. ஜி.ராமகிருஷ்ணன் புலம்பல்!

By Mathi
Google Oneindia Tamil News

திருப்பூர்: தேர்தல்களில் விகிதாசார பிரதிநித்துவம் அமலில் இருந்தால் சட்டசபை தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்ற மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

CPM wants to changes in present Electoral System

திருப்பூரில் நடைபெற்ற இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் என்ற கருத்தரங்கில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

  • லோக்சபா தேர்தலில் பாஜக 31% வாக்குகளை மட்டுமே பெற்று அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
  • 69% வாக்குகள் அக்கட்சிக்கு எதிரான வாக்குகளாகும். ஆகையால் பாஜக வெற்றியின் ஜனநாயக உள்ளடக்கத்தை ஏற்க முடியாது.
  • 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு 38.4%; கிடைத்தது 150 எம்.எல்.ஏக்கள்.
  • திமுக 22.4% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 23 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்தனர்.
  • அதே நேரத்தில் 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்.
  • அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளுக்கும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., இடங்களுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன.
  • 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு 6%. ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
  • விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருந்தால் மக்கள் நலக் கூட்டணிக்கு 15 எம்.எல்.ஏக்கள் கிடைத்திருப்பர்.
  • பல நாடுகளிலும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது.
  • இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்திரஜித் குப்தா குழு பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பித்தும் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
  • சுதர்சன நாச்சியப்பன் குழுவிடமும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
  • விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.
  • தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பதன் மூலம் பெருவாரியாக வெள்ளமென பணம் செலவிடுவதை தடுக்க முடியும்.
  • தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவி வகிப்போர், உயர் பதவி வகிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வரக்கூடாது.
  • தேர்தல் தொடர்பான வழக்குகள், ஒருவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  • சிவகங்கை தொகுதியில் 2009 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் பெற்ற வெற்றி குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் அந்த 5 ஆண்டுகாலப் பதவியை முடித்து, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் வந்துவிட்டார்.
  • ஆகையால் தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
English summary
CPM State Secretary G Ramakrishnan wanted to immediate changes in Present Electoral System.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X