For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதால் குற்றங்கள் அதிகரிப்பு - அன்பழகன் சாடல்

Google Oneindia Tamil News

புதுகை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து விட்டன என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க பொதுகூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன்அரசு தலை மை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரியய்யா, தெற்கு மாவட்ட செயலாளர் தங்க வேலு ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. பொது செயலாளர் அன் பழகன் கலந்து கொண்டு பேசினார்.

Crime rate increased in TN - Anbazhagan

அப்போது அவர், "கடந்த தி.மு.க ஆட்சியின் போது பால், அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்ற விலையை விட பல மடங்கு அளவிற்கு விலைவாசி வரலாறு காணாத அளவிற்கு தற்போது உயர்ந்து விட்டது.

பருப்புகளின் விலை போன மாதம் வரை ரூபாய் 62க்கு விற் பனையானது. ஆனால் தற்போது ரூபாய் 218க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் ரூபாய் 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த தோடு, பயிர்க்கடன் ரூபாய் 4 ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்தது. அதைப் போலவே இந்த முறை மதுக்கடைகளை மூடி விட்டு சிறந்ததொரு நல்லாட்சியை தி.மு.க தரும்.

தமிழகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 300 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில் பஞ்சம் வந்ததில்லை. தஞ்சையில் விளைந்து தமிழகத்தை வாழ வைத்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது தஞ்சையும் வறட்சியாகி விட்டது. சட்ட சபையில் அனைத்தையும் விதி எண் 110-ன்கீழ் ஜெயலலிதா அறிவித்து கொண்டிருக்கிறார். இதுவரை 130க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அறிவித்து உள்ளார்.

ஆனால் எதையும் செயல் படுத்தவில்லை. இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத் திற்கும், கரூர் மாவட்டத்திற்கும் மருத்துவ கல்லூரி கொண்டு வரப் போவதாக அறிவித்திருக் கிறார். ஆண்டு கடைசியில் அறிவித்தது செயல்படுத் துவதற்கு அல்ல. மக்களை ஏமாற்றுவதற்காக. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் கொலை, கொள்ளை, திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து விட்டது" என்று பேசினார்.

English summary
TN in the hand of theft, murder due to law and order is not present properly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X