For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரை மீண்டும் சூழ்ந்துள்ள வெள்ளம்... வடலூர் உள்ளிட்ட 350 கிராம மக்கள் உணவு, குடிநீரின்றி தவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கடலூர்: சென்னை நோக்கி நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது..... கொடை நோக்கம் கொண்டவர்கள் கடலூர் நோக்கி திரும்பவும் வேண்டும். கடலூர் மாவட்டம் வடலூர் உள்ளிட்ட 350 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. எங்களுக்கு தண்ணீரோ சாப்பாடோ இல்லை. . . . நிவாரணங்கள் கொண்டு வருபவர்கள் அனைவரும் நகர் புறங்களுக்கு கொண்டு செல்கிறார்கள் . . . . எங்களுக்கும் கொஞ்சம் உதவுங்கள் என்று கேட்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

கடலூர் கடந்த ஒருமாதகாலமாகவே வெள்ளத்தில் மிதக்கிறது. தொடரும் கனமழையால் ஆறுகளில் அபாயக்கட்டத்தைத் தாண்டியும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9ம் தேதி பெய்த கனமழை யால் சிதம்பரம், பண்ருட்டி, காட்டு மன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடந்து கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் மீண்டும் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சனிக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. ஞாயிறன்ற காலையில் இருந்து மாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது.

நிவாரணம் கிடைக்கவில்லை

நிவாரணம் கிடைக்கவில்லை

திங்கட்கிழமையன்று பலத்த மழை பெய்தது. இதனால் கடலூர், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள் ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த ஒருமாத காலமாகவே பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் உள்ள கிராமங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிவாரண உதவிகளை செய்வோர் இந்த கிராமங்களுக்கும் கொண்டு செல்லலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த கிராமம்

வெள்ளம் சூழ்ந்த கிராமம்

ஆதிநாராயணபுரம், ஆடுரகரம், அடூர் குப்பம், அகாட்டிம்மபுரம், அழகியநாதம், ஆலப்பாக்கம், அம்பலவானம்பேட்டை, ஆண்டர்முள்ளிப்பள்ளம், அன்னவள்ளி,அனுக்கம்பட்டு, அரங்கமங்கலம், அரிசிப்பெரியங்குப்பம், ஆயிக்குப்பம், புட்டாம்படி, செல்லஞ்சேரி,சென்னப்பநாயக்கன்பாளையம், சின்ன கங்கணங்குப்பம், கடலூர் போர்ட், கங்கம நாயக்கன் குப்பம், குண்டுப்பாலவாடி கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தில் மிதக்கிறோம்

வெள்ளத்தில் மிதக்கிறோம்

குருவப்பன்பேட்டை, இடங்கொண்டாம்பேட்டை, இரண்டாயிரவிலகம், காளையூர்,கம்பளிமேடு, காஞ்சமண்டன்பேட்டை,கன்னடி காரைக்காடு,காரைமேடு, கரையேராவிட்டாகுப்பம், காரமணிக்குப்பம்,கரணப்பட்டு,கருங்குளி,கருப்படித்துண்டு, கருவேப்பம்பட்டி, காயல்பட்டு,கேசவ நாராயண புரம்,கீழ் அழிஞ்சிப்பட்டு,கிழிஞ்சிக்குப்பம்,கீழ் குமாரமங்கலம்,கோதண்டராமபுரம், கோலக்குடி,கோணமங்கலம்,கொண்டூர்,கோதவாச்சேரி,கிருஷ்ணன் குப்பம்,குடிக்காடு, குமாரபேட்டை,குண்டியமல்லூர்,குறிஞ்சிப்பாடி,மடல்பட்டு,மலைப்பெருமால் அகரம்,மருடடு,மருவாய்,மாவடிப்பாளையம் மேலகுப்பம்,மேலலிஞ்சிப்பட்டு,மேலப் புதுப்பேட்டை,நடுவீரப்பட்டு,நாகப்பனூர்,நல்லதூர்,நட்டப்பட்டு ஆகிய கிராமங்களுக்கும் நிவாரண உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது கிராம மக்களின் வேதனை.

உணவு, குடிநீர் இல்லை

உணவு, குடிநீர் இல்லை

நயிணாக்குப்பம், ஓட்டேரி,பச்சயங்குப்பம்,பள்ளிப்பட்டு,பெட்டுநாயக்கன் குப்பம்,பெரியகங்கணாங்குப்பம்,பிள்ளலி, பொன்னயங்குப்பம், புதுக்கடை, புவனிக்குப்பம், ராஜகுப்பம், ராமபுரம், ரங்கநாதபுரம், சீதாபாளையம், செம்பங்குப்பம் சிங்கிரிக்குடி, சிறுப்பாளையூர், சுப உப்பளவாடி, தம்பிப்பேட்டை, தணூர், தயில்குணம்பட்டினம், தேனம்பாக்கம், தம்பிப்பாளையம் ஆகிய வெள்ளம் சூழ்ந்த கிராமங்களுக்கும் நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை சென்று சேரவில்லை.

எங்களையும் கவனிங்க

எங்களையும் கவனிங்க

துக்கணாம்பாக்கம், திம்மருவதம் பாக்கம், தீர்த்தங்கரை, திருச்சேபுரம், திருமணிக்குழி, திருப்பணாம்பாக்கம், திருவண்டிபுரம், தியாகவெள்ளி, தொண்டமானதம், தோப்புக்கொல்லை, தொட்டப்பட்டு, உச்சிமேடு, உடலப்பட்டு, உள்ளேரிப்பட்டு, வடபுரம், கீழ்பாடி, வலுடம்படு, வானமாதேவி, வராகல்பட்டு, வெளிச்சமண்டலம், வெள்ளக்கரை, வெள்ளப்பாக்கம், வெட்டுக்குளம், விலங்கல்பட்டு, விருப்பாச்சி ஆகிய கிராமங்களுக்கும் நிவாரண உதவி தேவைப்படுகிறது.

350 கிராமங்களில் வெள்ளம்

350 கிராமங்களில் வெள்ளம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருமாள் ஏரியும் நிரம்பி வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. வெள்ளாற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. கடலூரில் அனைத்து நகர்களும் தண்ணீரில் மிதக்கின்றன. தொடர் மழை அறிவிப்பையடுத்து மீட்புப் பணிகளில் ஈடுபட கடலூர் வந்துள்ள 180 ராணுவத்தினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
The coastal district of Cuddalore is witnessing incessant rains that has flooded 350 villages in the district. Cuddalore, Panruti, Vadalur, Kurinjipadi, Chidambaram and Bhuvanagiri have submerged under water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X