For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவியில் சிறப்பு நிகழ்ச்சி பார்த்தால் போதும்..இதுதான் மக்களின் புத்தாண்டு 'சபதம்'.. ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் பணப் பிரச்சனை இன்னும் தீராததால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் இந்த ஆண்டு புத்த

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் பணப் பிரச்சனை இன்னும் தீராததால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் சிறக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 50 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. 50 நாட்களை தாண்டியும் மக்களின் பணப் பிரச்சனை இன்னும் தீர்ந்தப்பாடில்லை.இன்றளவும் மக்கள் பணத்திற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் முன்பு காத்துக் கிடக்கின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணமின்றி மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் புத்தாண்டு இன்னும் ஓரிரு நாளில் கொண்டாடப்படவுள்ளது. டிசம்பர் 31 இரவில் இருந்தே புத்தாண்டு களைகட்ட தொடங்கி விடும். ஏற்கெனவே பணத்தட்டுப்பாட்டால் சுற்றுலாதலங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

கையில் காசு இல்லாததால் கடந்த ஆண்டைப் போல இந்த புத்தாண்டை கொண்டாடி வரவேற்பது சந்தேகம் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் எல்லா இடங்களிலும் கைகொடுப்பதில்லை. பணத் தட்டுப்பாட்டால் எல்லா விஷயங்களும் முடங்கியுள்ளதாக மக்கள் குறைகூறியுள்ளனர்.

ஆன் லைன் புக்கிங் விறுவிறு

ஆன் லைன் புக்கிங் விறுவிறு

அதேநேரத்தில், ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. பப்கள் உட்பட பல இடங்களில் இதற்காக ஆன்லைன் புக்கிங்குகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

 அதிகம் செலவிட தயார்

அதிகம் செலவிட தயார்

இதுகுறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், இந்த புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடந்த ஆண்டை விட அதிகமாக செலவிட தயாராக இருப்பதாக 52 சதவீதம் பேரும், கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்குள்தான் என 31 சதவீதம் பேரும், 17 சதவீதம் பேர் முடிந்த வரை சிக்கனமாக இருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.

 பட்ஜெட் போட்டுதான் கொண்டாடனும்

பட்ஜெட் போட்டுதான் கொண்டாடனும்

ரூபாய் நோட்டு தட்டுபாட்டால் பட்ஜெட் போட வேண்டிய அவசியம் வந்துள்ளதாக அவர்களில் 34 சதவீதம் பேர் கூறியுள்ளனர் என அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வசதி படைத்தவர்கள் ரெடி

வசதி படைத்தவர்கள் ரெடி

பெருநகரங்களில் இந்த உற்சாகம் பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வசதி படைத்தவர்கள்தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆன்லைன் புக்கிங் மூலம் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

 டிவியோட நிறுத்திப்போம்

டிவியோட நிறுத்திப்போம்

நடுத்தர மக்களில் பலர், இந்த புத்தாண்டில் கொண்டாட்டங்களுக்கு திட்டமிடவில்லை. தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுடன் வீட்டிலேயே புத்தாண்டை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

 சிக்கனமா இருப்போம்

சிக்கனமா இருப்போம்

பெரும்பாலான கடைகளில் குறைந்த பட்சம் ரூ.200க்கு வாங்கினால்தான் கார்டு ஏற்கப்படும் என்பதால், தேவையற்ற பொருட்களை வாங்கி பணத்தை செலவழித்து விட்டதாக சிலர் கூறியுள்ளனர். ஆகையால் புத்தாண்டை சிக்கனமாக கொண்டாட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.டெபிட் கார்டை நம்பி நல்ல ஓட்டலுக்கு சென்றால் கூட ஒரு சிறு குடும்பத்துக்கு செலவு ரூ.2,000ஐ தாண்டிவிடும். ஏற்கெனவே உள்ள பணத்தட்டுப்பாட்டில் இதெல்லாம் சாத்தியமே இல்லை என்றும் நடுத்தர மக்கள் தெரிவித்துள்ளனர்.

 காலியான பங்களாக்கள்

காலியான பங்களாக்கள்

வரும் புத்தாண்டிலாவது பணப்பஞ்சம் தீர்ந்து மக்கள் கையில் காசு பணம் புரள வேண்டும் என்றும் மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு கடற்கரை பங்களாக்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டவில்லை. ஒரு சிலர் மட்டுமே குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பங்களாக்கள் அனைத்தும் காலியாகவே காணப்படுகின்றன.

 டிக்கெட் வாங்க ஆளில்லை

டிக்கெட் வாங்க ஆளில்லை

நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துகள், நடனங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அங்கும் யாரும் ஆர்வமாக டிக்கெட்டுகளை வாங்கிச் செல்லவில்லை. இதனால் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் குறைவாக இருக்கும் என தெரிகிறது.

 முன்கூட்டியே கொண்டாடிய மும்பை

முன்கூட்டியே கொண்டாடிய மும்பை

மும்பையில் உள்ள பெரும்பாலான டான்ஸ் பார்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த வார இறுதியிலேயே முடிந்து விட்டது. டான்ஸ் பார்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டும். இங்கு வரும் ரசிகர்கள் பணத்தை வாரி இறைப்பார்கள். அதற்கு இப்போது சாத்தியமில்லை.
டிசம்பர் 30 வரை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யலாம். எனவே, கடந்த வார இறுதியிலேயே மும்பை டான்ஸ் பார்களில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்துவிட்டது.

English summary
The currency issue in not yet solved across the country. People Still facing problem for money. People Standing front of ATMs and Banks till date. Because of this issue Most people are planning to celebrate New Year at home, and television specials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X