For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 கியர்.. மரத்தால் ஆன டிசைன்.. சுற்றுச்சூழலைக் காக்கும் செம சைக்கிள்.. கோவை இளைஞர் அசத்தல்!

மரத்தாலான சைக்கிளை செய்து கோவை இளைஞர் சாதனை புரிந்துள்ளார்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மரத்தால் ஆன செம சைக்கிள்-கோவை இளைஞர் அசத்தல்-வீடியோ

    கோவை: சுற்றுசூழல் மற்றும் சைக்கிள் பயன்பாடு குறித்து இளைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் நோக்கில் மரத்தால் செய்யப்பட்ட டிரெண்டி சைக்கிளை கோவை இளைஞர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

    ஒருபக்கம் நகர் முழுவதும் மோட்டார் வாகனங்களால் சுற்றுச் சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு புறம் சைக்கிள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.. என்ன செய்வது என்று யோசித்தார் ஒருவர் இளைஞர்.

    முற்றிலும் மரத்தால் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் இளைஞர்களை கவரும் வகையிலான ஒரு டிரெண்டி சைக்கிளை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார். அது பற்றிய விவரங்களை இனி காண்போம்.

    மரத்தால் செய்த சைக்கிள்

    மரத்தால் செய்த சைக்கிள்

    கோவையை அடுத்த இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து வீட்டு உள் அலங்காரப் பணிகளைச் செய்துவருகிறார் . தனது பழைய சைக்கிளை புதுப்பிக்க ஆசைப்பட்டார். அதற்கான வேலையை செய்துகொண்டிருக்கும்போது வீட்டு உள் அலங்கார வேலை செய்து வந்த மரத்தை கொண்டு சில பாகங்களை அந்த சைக்கிளில் இணைத்தார். அப்போதுதான் புரிந்தது நாம் ஏன் புதிய சைக்கிளை தயாரிக்க கூடாது என்று. சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வரும் இந்த சூழலில், இதுபோன்ற வித்யாசமான சைக்கிளை உருவாக்கினால் இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில், முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட சைக்கிளை உருவாக்கியும் விட்டார் முருகேசன்.

    உடற்பயிற்சிக்கு சைக்கிள்

    உடற்பயிற்சிக்கு சைக்கிள்

    தனது நண்பரின் உதவியுடன் உருவாக்கி உள்ள இந்த சைக்கிள் ‘weather coating' கொடுக்கப்பட்ட பிளைவுட் கொண்டுதான் உருவாக்கி உள்ளார். ஃப்ரேம், டிசைன், அலாய் என 90 சதவிகிதம் மரத்தாலேயே மாற்றி உள்ளார். உடல்நலத்தை காத்துக் கொள்ள டாக்டர்களும் சைக்கிள் பயிற்சியைத்தான் பரிந்துரை செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நிறைய பிரபலங்களும் சைக்கிள் பயிற்சியில் இறங்கியுள்ளனர். இதன்காரணமாக, இந்தியாவில் சைக்கிள் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால் வித்யாசமான சைக்கிளை உருவாக்கும் முயற்சியில் இந்த மர சைக்கிளை தயாரித்து உள்ளார்.

    சைக்கிளில் பெயர் எழுதலாம்

    சைக்கிளில் பெயர் எழுதலாம்

    யூரோபில் கூட, ஃப்ரேம் மட்டும்தான் மரத்தால் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதில் 7 கியர்ஸ் உள்ளதாகவும் கூறும் முருகேசன், அலாய் கூட மரத்தால் செய்து உள்ளனர். ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கில் உள்ள எல்லா வசதியும் இதில் உள்ளது. இந்த சைக்கிளை ஆர்டர் செய்பவர்களுக்கு அவர்களின் , பெயரையும் இதில் எழுதித் தருவது இந்த சைக்கிளின் கூடுதல் சிறப்பாம். தன்னுடைய சைக்கிளை ‘ஹைப்ரிட் பைக்' என்று அழைக்கக் காரணம், இது ஏழு கியர் கொண்டது,

    மலையும் ஏறலாம்

    மலையும் ஏறலாம்

    எஃகுவுக்குப் பதிலாக ஸ்டீலால் ஆனது, எடை குறைவு, இருக்கையின் உயரத்தை ஒரு ‘கிளிக்'கில் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம், முன் சக்கரத்தையும் பின் சக்கரத்தையும் எளிதில் கழற்றி மாட்டலாம், இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளன என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய மர சைக்கிள் சமதளமான தார் ரோட்டில் மட்டுமல்ல, மலையேற்றத்துக்கும் தாக்குப்பிடிக்கும் எனவும் கூறுகிறார்.சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முற்றிலும் புதிய வடிவத்தில் தயாரித்து உள்ள இந்த சைக்கிள் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    English summary
    Youth Murugesan has created a wooden trendy bicycle with a view to bring awareness to younger generations about the use of ecological and cycling in Kovai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X