For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

    சென்னை: வங்கக் கடலில் புல்புல் புயல் சின்னம் இன்று உருவாகி உள்ளதால், அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான மஹா புயல் குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரிதாக மழையில்லை.

    இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு புதிய புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ''புல்புல்'' என்று பாகிஸ்தான் பெயர் சூட்டி உள்ளது,

    உங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி? இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க!உங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி? இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க!

    புல் புல் புயல்

    புல் புல் புயல்

    ‘புல்புல்' என்பது அரபி மொழியில் அழைக்கப்படும் ஒருவித பாடும் பறவையாகும். புல்புல் புயல் வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்றும் வங்கதேசத்தை ஒட்டி கரையை கடக்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

    புயல் நகரும்

    புயல் நகரும்

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும். இது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    புயல் காரணமாக வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும். சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளுக்கு செல்லவே கூடாது.

    லேசான மழைக்கு வாய்ப்பு

    லேசான மழைக்கு வாய்ப்பு

    இந்த புல்புல் புயலால் தமிழகத்துக்கு எந்தவிதமான மழையும் இருக்காது.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.
    வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது." என்றார்.

    15 மாவட்டங்களில்

    15 மாவட்டங்களில்

    இதனிடையே புல்புல் புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

    English summary
    Cyclone Bulbul Form over Bay of Bengal; Move Towards East Coast, fishermens should not go andaman sea from today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X