For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திசை மாறிய மாதி புயல்… தமிழகத்திற்கு பாதிப்பில்லையாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 'மாதி' புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மாதி' புயலாக மாறியது. இந்த புயல் சென்னையில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்தமான் நிகோபர் தீவு, தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Sat Pics

மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே சென்னை, கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்காலில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு காலையில் ஏற்றப்பட்டது.

இந்நிலையில், வடக்கு திசையை நோக்கி மாதி புயல் நகர்ந்துள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், நாகை, ராமேஸ்வரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் தற்போது 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

விட்டு விட்டு மழை

இந்த நிலையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சென்னையில் அநேக இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

English summary
Skymet weather has been actively following the development of the low pressure in the Bay of Bengal. It first appeared as a cyclonic circulation on the 1st of December and remained as a well-marked low for 5 days. The system turned into a depression and then a deep depression last night and as predicted earlier, it became a cyclone on the 7th morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X