For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 1991-96-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவரது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

DA case: Ex Minister Aranganayagam convicted for 3 years in prison

இந்நிலையில் இந்த வழக்கானது சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோமதி நாயகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்துக்கு அதிகமாக அரங்கநாயகம் சொத்து சேர்த்தது ஊர்ஜிதமானதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் இருந்து அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் விடுவிக்கப்பட்டனர்.

அவருக்கு ஜாமீன் வழங்க அனுமதி உள்ளதால் அவர் இந்த தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்பபிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் சுமார் 21 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Ex Education Minster Aranganayam gets 3 years term in jail for disproportionate case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X