For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதமாற்ற அறிவிப்பு எதிரொலி: சர்ச்சைக்குரிய பழங்கள்ளிமேடு ஆடி திருவிழா நிறுத்தம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்ததை பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு தரப்பு மக்களிடையே சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஆணை வரும் வரை திருவிழா நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.

பழங்கள்ளி மேடு கிராமத்தில் ஆடி மாதம் 5 நாட்கள் நடைபெறும் வருடாந்திர கோவில் திருவிழாவில் தங்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. இது காலம் வரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து இவர்கள் கோவிலுக்கு வருவதற்கும், கோவில் விழாவில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 70 தலித் குடும்பங்களும் இதேபோன்ற காரணத்திற்காக மதம் மாற முடிவு செய்துள்ளனர். இதனால் இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவுகிறது.

பழங்கள்ளி மேடு கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர ஐந்து நாள் கோவில் திருவிழாவில் தங்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. இது காலம் வரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து இவர்கள் கோவிலுக்கு வருவதற்கும், கோவில் விழாவில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனர். இனியும் பொறுக்க முடியாமல்தான் இவர்கள் மதம் மாற முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இரு தரப்பு மக்களிடையே சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஆணை வரும் வரை திருவிழா நடத்துவதற்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனால் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.

English summary
Nagappattinam collector stop Five-day annual festival at the Bhadra Kaliamman temple As per the reports, 180 Dalit families have claimed that upper caste Hindus are denying them the right to lead rituals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X