For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை சிறையில், ஆணவ கொலை குற்றவாளிகளை நீதிபதியிடம் அடையாளம் காட்டினார் கவுசல்யா

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: வேறு ஜாதி பெண்ணை காதல் மணம் செய்ததற்காக ஆணவ கொலை செய்யப்பட்ட தலித் வாலிபர் சங்கரின் மனைவி கவுசல்யா, கொலையாளிகளை இன்று அடையாளம் காண்பித்தார். இதற்காக கோவை மத்திய சிறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உடுமலைபேட்டை பஜாரில் வைத்து கடந்த 13ம் தேதி தலித் வாலிபர் சங்கர் அவரது காதல் மனைவி கவுசல்யா முன்னிலையில் கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். வெட்டு காயமடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Dalit youth honour killing: Police to conduct test identification parade of the five accused

இந்நிலையில், ஆணவ கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளை இன்று கவுசல்யா அடையாளம் காட்ட சம்மதித்தார்.

நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில், கொலையாளிகள் 5 பேரின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, கொலையாளிகளின் முகத்தை பார்த்து, கொன்றவர்களை கவுசல்யா அடையாளம் காட்டினார்.

அதன்பின்னர் மீண்டும் கவுசல்யாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அடையாள அணிவகுப்பையொட்டி சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

60 செகண்ட்- வேறு ஜாதி பெண்ணை காதல் மணம் செய்ததற்காக ஆணவ கொலை செய்யப்பட்ட தலித் வாலிபர் சங்கரின் மனைவி கவுசல்யா, கொலையாளிகளை இன்று அடையாளம் காண்பித்தார். இதற்காக கோவை மத்திய சிறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில், கொலையாளிகள் 5 பேரின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, கொலையாளிகளின் முகத்தை பார்த்து, கொன்றவர்களை கவுசல்யா அடையாளம் காட்டினார்.

English summary
Coimbatore police to conduct test identification parade of the five accused in the Dalit youth honour killing case on Tuseday,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X