For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார்.. வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி

செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தஷ்வந்திற்கு இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும்..வழக்கறிஞர்- வீடியோ

    சென்னை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

    சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்தது. 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார்.

    Daswant will appeal in High court says Lawyer Rajkumar

    இதனால் அந்த பிரிவுகளின் கீழும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதுஇல்லாமல் இரண்டு பிரிவுகளின் கீழ் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். தற்போது கோர்ட் வளாகத்தில் அவரது வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

    அதில் ''செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார். தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்'' என்றுள்ளார்.

    மேலும் ''தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. அபராதம் விதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Daswant lawyer says that, he will go to High court for appeal. Police takes killer Daswant to Puzhal Central Prison .Almost year ago, Hasini, a seven-year-old girl, was found brutally raped and murdered in Chennai. Twenty-three-year-old techie, S Daswant, was taken into custody in connection with the crime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X