For Daily Alerts
மருமகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு – மாமனார் மீது வழக்கு பதிவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாமனார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீர்காழியைச் சேர்ந்த அந்தப் பெண், செங்கல்பட்டை அடுத்த ஆதனூரைச் சேர்ந்த யுவசெல்வனை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு யுவசெல்வனின் தந்தை திருசங்கு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்றும் அந்த இளம்பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். இவ்வழக்கின் மீதான விசாரணையைப் போலீசார் துவக்கியுள்ளனர்.