For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூர் தொகுதியில் கருணாநிதி விசுவாசி ஒருவர் கூட இல்லைய?: தயாநிதி அழகிரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியாற்ற கலைஞர் விசுவாசி ஒருவர் கூட இல்லையா?" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கருணாநிதியின் பேரன் தயாநிதி அழகிரி.

கடந்த 2015ம் ஆண்டு திமுகவிலிருந்து தற்காலிக நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுக தலைமை மீது பரபரப்பு புகார் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்த அவர், சந்தர்ப்பம் கிடைத்தால் அதிமுகவில் இணைவேன் என்றும் சொல்லியிருந்தார். ஜெயலலிதா திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் தெரிவித்தார்.

Dayanidhi Alagiri comments Anitha Radhakrishnan

அதிமுக தலைமையிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காத காரணத்தால் திமுக தலைமையிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்தார் அனிதா ராதாகிருஷ்ணன். அதே அனிதாவிற்கு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி, தனது டுவிட்டர் பக்கத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் வகையில் ஒரு விசுவாசி கூட இல்லையா என்று ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். மதுரையில் கருணாநிதி பிரச்சாரம் செய்த நாளில் இந்த பதிவை போட்டுள்ளார் தயாநிதி அழகிரி.

English summary
Dayanidhi Alagiri comments Tiruchendur DMK candidate Anitha Radhakrishnan on his Twitter Page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X