For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிப்பு- கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற தயாநிதி மாறன்

திமுக தலைவர் கருணாநிதியிடம் தயாநிதி மாறன் வாழ்த்து பெற்றார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பிஎஸ்என்எல் வழக்கிலிருந்து வெளிவந்த சன் குழுமம், தயாநிதி மாறன்

    சென்னை: பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மத்திய அமைச்சராக இருந்தபோது தமக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத எக்ஸ்சேஞ்ச் நடத்தினார் தயாநிதி மாறன் என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    Dayanidhi maran meets Karunanidhi

    இவ்வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி தயாநிதி மாறன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், முகாந்திரம் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து திமுக தலைவரும் தமது தாத்தாவுமான கருணாநிதியை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் வாழ்த்து பெற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு போட்டனர் என்றார்.

    English summary
    Former Telecom minister Dayanidhi Maran met DMK President Karunanidhi on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X