For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய சென்னையில் தயாநிதி மாறன் வெல்வது சிரமம்!- தந்தி டிவி கருத்துக் கணிப்பு

|

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது உறுப்பினராக இருக்கும் மத்திய சென்னையில் அதிமுக ஆதரவு அலை நிலவுவதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ்தேசமயம், தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக தந்தி டிவியின் கருத்துக் கணிப்பு கூறும் தகவல்களின் தொகுப்பு:

மத்திய சென்னை....

மத்திய சென்னை....

சென்னை நகரின் முக்கிய தொகுதிகளில் மத்திய சென்னை ஒன்று ஆகும். மத்திய சென்னை தொகுதியில் அதிகளவிலான முஸ்லிம் மக்கள், தெலுங்கு பேசும் மக்கள் என பல தரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். முக்கிய பிரபலங்கள் பலரும் வசிக்கும் தொகுதியும் இது தான்.

எழும்பூர்...

எழும்பூர்...

முன்பு இந்த தொகுதியில் பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

தொகுதி மறுசீரமைப்பு...

தொகுதி மறுசீரமைப்பு...

தொகுதி மறுசீரமைப்பின் மூலம் பூங்காநகர், புரசைவாக்கம் தொகுதிகள் நீக்கப்பட்டு வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகள் மத்திய சென்னை தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இதுவரை தனித்தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக செல்வாக்கு....

திமுக செல்வாக்கு....

மத்திய சென்னை தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது தி.மு.க.வே இதுவரை அதிக முறை வென்றுள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் மொத்தம் 7 முறை இந்த தொகுதியில் தி.மு.க. வெற்றியை ருசித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு முறை வென்று உள்ளது. ஒரு முறை ஜனதா கட்சி ஜெயித்துள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சியான அ.தி.மு.க.வுக்கு மட்டும் இதுவரையில் இந்த தொகுதியில் வெற்றி கிட்டவேயில்லை.

நேரடிப்போட்டி...

நேரடிப்போட்டி...

1996-ம் ஆண்டு முதல் 2004 வரை இத்தொகுதி முரசொலிமாறன் (தி.மு.க.) வசம் இருந்தது. அதன் பின்னர் இத்தொகுதியின் எம்.பி.யாக அவரது மகன் தயாநிதிமாறன் (தி.மு.க.) இருந்து வருகிறார். 4 முறை தி.மு.க-அ.தி.மு.க. இடையில் நேரடி போட்டி ஏற்பட்டது.

35 வேட்பாளர்கள்....

35 வேட்பாளர்கள்....

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறனும், அ.தி.மு.க. சார்பில் முகமது அலி ஜின்னா, தே.மு.தி.க. சார்பில் வி.வி.ராமகிருஷ்ணனும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலியும் போட்டியிட்டனர். அதுமட்டுமல்லாமல், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதன்முறையாக...

முதன்முறையாக...

2009-ம் ஆண்டு முதல் முறையாக களம் இறங்கிய தே.மு.தி.க. 38 ஆயிரத்து 959 வாக்குகளை பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹைதர்அலி 13 ஆயிரத்து 160 வாக்குகளை பெற்றார்.

4 இடங்களில் அதிமுக....

4 இடங்களில் அதிமுக....

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க.வும், எழும்பூர் தொகுதியில் தே.மு.தி.க.வும் மற்ற 4 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 புதிய வாக்காளர்கள்....

புதிய வாக்காளர்கள்....

கடந்த (2009) நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதியில் 9 லட்சத்து 74 ஆயிரத்து 861 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் என கூடுதலாக 3 லட்சத்து 5 ஆயிரத்து 390 பேர் அதிகரித்துள்ளனர். தற்போது, 12 லட்சத்து 80 ஆயிரத்து 251 வாக்காளர்கள் உள்ளனர். எனவே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

வாக்காளர்கள்....

வாக்காளர்கள்....

சட்டமன்ற வாரியாக கணக்கிட்டால் வில்லிவாக்கத்தில் 2,29,661 வாக்காளர்களும், எழும்பூர் (தனி) 1,78,793 வாக்காளர்களும், துறைமுகத்தில் 1,73,645 வாக்காளர்களும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2,11,532 வாக்காளர்களும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 2,24,831 வாக்காளர்களும், அண்ணாநகர் தொகுதியில் 2,61,789 வாக்காளர்களும் உள்ளனர்.6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்களில் ஆண்கள்-6,40,969, பெண்கள்-6,39,055, திருநங்கைகள்-227.

வாழ்க்கைதரம்....

வாழ்க்கைதரம்....

ஐக்கிய முற்போகுக் கூட்டணி அரசால் உங்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு இங்குள்ள வாக்காளர்கள் 75 சதவீதம் பேர் இல்லை என்று கூறியுள்ளனர்.

இல்லை....

இல்லை....

மத்திய அரசால் தமிழகம் நன்மை அடைந்ததா என்ற கேள்விக்கு 86 சதவீதம் பேர் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

விலைவாசிக்கு அடுத்து ஊழல்...

விலைவாசிக்கு அடுத்து ஊழல்...

விலைவாசி உயர்வுதான் முக்கியப் பிரச்சினை என்று 42 சதவீதம் பேரும், ஊழல்தான் என்று 39 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தேசியக்கட்சிக்குத் தான்...

தேசியக்கட்சிக்குத் தான்...

உங்களது ஓட்டு மாநிலக் கட்சிக்கா, தேசியக் கட்சிக்கா என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் தேசியக் கட்சிக்கு என்று பதிலுரைத்துள்ளனர்.

பாஜகவுக்கு...

பாஜகவுக்கு...

தேசியக் கட்சி என்றால் பாஜகவுக்கு என்று 67 சதவீதம் பேரும், 31 சதவீதம் பேர் கம்யூனிஸ்ட் என்றும், ஒரு சதவீதம் பேரே காங்கிரஸுக்கும் வாக்களித்துள்ளனர்.

அதிமுகக்கு ஆதரவு...

அதிமுகக்கு ஆதரவு...

மாநிலக் கட்சி என்றால் அதிமுக என்று 75 சதவீதம் பேரும், திமுக என்று 16 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு 4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மிக்கு நோ....

ஆம் ஆத்மிக்கு நோ....

ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு 94 சதவீதம் பேர் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

English summary
The Thanthi tv election survey has said that the central Chennai constituency sitting MP dayanithi Maran has low winning chance in the same constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X