For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊனத்தை நொறுக்கி தள்ளிய மாணவர்கள்.. 10-ம் வகுப்பில் சதமடித்து சாதனை!

காது மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் தேர்வு முடிவில் சதம் அடித்துள்ளனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: பத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, ஊனம் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள்.

கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

சைகை மொழியே சொந்தம்

சைகை மொழியே சொந்தம்

தேர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது இவர்களுக்கு சாதாரண காரியமாக இல்லாத போதிலும், இதற்கும் மேலாக இருந்து, கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்து உள்ளனர். சைகை மொழி மட்டுமே தனக்கே உரித்த பாணியில் ஒவ்வொரு நாளையும் சாதனையாக கடந்து வரும் இந்த மாணவிகள் மேலும் தற்போது ஒரு படி சாதனையை உயர்த்தி காண்பித்து உள்ளனர்.

கை கொடுத்த கடின உழைப்பு

கை கொடுத்த கடின உழைப்பு

மற்ற பாடங்களை காட்டிலும் கணித பாடத்தை இந்த மாணவர்கள் புரிந்து கொள்ள பல கடினங்களை சந்தித்து வந்தாலும், கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும் இந்த மதிப்பெண்ணை எடுத்துக் காட்டி உள்ளனர். பல காரணங்களால் சில நாட்கள் வீட்டில் முடக்கி வைத்து இருந்த தனது பிள்ளையை இதுபோன்ற ஒரு பள்ளியில் படிக்க வைத்தது தற்போது பெருமை அளிப்பதாகவும் இவரை போன்று உள்ள குழந்தைகளை அனைத்து பெற்றோர்களின் கல்வி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

பெருமைப்படும் ஆசிரியர்கள்

பெருமைப்படும் ஆசிரியர்கள்

சாதாரண மாணவர்களை விட இதுபோன்று சிறப்பு மாணவர்களுக்கு தனி கவனத்துடன், பல்வேறு இடர் பாடுகளுடன் பாடங்களை கற்பித்து வருவதாகவும், இருப்பினும் இவர்களின் தேர்ச்சி தங்களுக்கு பெருமையை அளிப்பதாக உள்ளதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள். இதனால் மற்ற காது கேளாத, மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு மாணவிகளின் இந்த மதிப்பெண்கள் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

அரசின் உதவி தேவை

அரசின் உதவி தேவை

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் ஒவ்வொருவரும் பல இன்னல்களுக்கு இடையே இந்த பொதுத் தேர்வை எழுதுவதாகவும், இருப்பினும் இந்த மாணவர்களுக்காக அரசு தேர்வு எழுதுவதில் சில சலுகைகளை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.தற்போது இந்த மணாவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும் , அடுத்த மேல் படிப்பிற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெற்றோர்கள் முன் வைக்கின்றனர்.

English summary
10th grade students who are deaf and dumb have achieved record. 7 students have scored a score in mathematics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X