For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாதம்விவாதம்: ஏற்றுவது ரூபாய் கணக்குல.. குறைக்கிறது பைசா கணக்குலயா?

By BBC News தமிழ்
|
ஏத்துகிறது ரூபாய் கணக்குல.. குறைக்கிறது பைசா கணக்குலயா?
Getty Images
ஏத்துகிறது ரூபாய் கணக்குல.. குறைக்கிறது பைசா கணக்குலயா?

அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. இது, ''பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைச் செவிமடுத்து பேருந்துக் கட்டணத்தை குறைத்தது வரவேற்கத்தக்க ஒன்றா? அல்லது இது பெயரளவிற்கான கட்டணக் குறைப்புதானா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''எதிர்க்கட்சிகள், மக்கள் போராட்டத்திற்காக இந்த நடவடிக்கை அல்ல!, முன்பே திட்டம் போட்ட ஒன்றுதான்... பெருமளவு உயர்த்தினால் மக்கள் கொந்தளிப்பார்கள். அதிலிருந்து சிறியதை குறைத்தால் பழையதை மறந்து விடுவர்.. அதையேதான் நம் அரசாங்கமும் செய்துள்ளது'' என்கிறார் ஷாகுல் எனும் நேயர்.

https://twitter.com/ckprithivi/status/957565626473566211

''பெருமளவு பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மக்களின் போராட்டத்திற்கு பிறகு கடுகளவு கட்டணக் குறைப்பை செய்திருப்பது கண்துடைப்புக்கு சம்மானது.'' என பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.

https://twitter.com/hema786/status/957503537109393409

''பொதுமக்கள் ஜீரணிக்க முடியாத அளவில் ஏழு ஆண்டுகளாக உயர்த்தாத கட்டணத்தை கனத்த இதயத்துடன் உயர்த்தி இருப்பதாய் முதலமைச்சரும் அமைச்சர்களும் கூறி இருப்பது ஏற்புடையது அல்ல.கட்டண குறைப்பும் கூட கண்துடைப்புதான்'' என்கிறார் மாதவ ராமன்.

ஏத்துகிறது ரூபாய் கணக்குல.. குறைக்கிறது பைசா கணக்குலயா?
BBC
ஏத்துகிறது ரூபாய் கணக்குல.. குறைக்கிறது பைசா கணக்குலயா?

''கட்டண குறைப்புக்கு போராட்டங்கள் காரணமல்ல, மக்கள் பேருந்து பயணத்தைப் புறக்கணித்ததே காரணம்.'' என்பது கமலக்கண்ணனில் கருத்து.

https://twitter.com/arulp23/status/957508257781768192

"ஏத்துறது ரூபாய் கணக்குல குறைக்கிறது மட்டும் செல்லாத பைசாவிலா ? இனியும் மக்களை ஏமாத்த முடியாது" என கூறுகிறார் ராஜா ராம்.

https://twitter.com/Sathiyasiva0246/status/957519776112295936

''இப்போதைய அரசு அணையப்போகும் விளக்கு. காரில் போகும் அமைச்சர்களுக்கு , மக்களின் கஷ்டம் புரியாது. அரசு மக்களுக்குப் பிச்சை போட வேண்டாம்.'' என பதிவிட்டுள்ளார் சரோஜா.

''உயர்த்தும்போது ரூபாய் கணக்கு குறைக்கும்போது பைசா கணக்கு .. கட்டண உயர்வைத் திரும்ப பெற வீதிக்குத் தான் வர வேண்டும்'' என்கிறார் தங்கராஜ்.

https://twitter.com/PoornachandranC/status/957509231325753345

''நீங்கள் ஏற்றியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதற்குள் கட்டண குறைப்பு நாடகம்'' என கூறுகிறார் மீனாட்சி சுந்தரம்.

https://twitter.com/ramprakash30/status/957538199991128064

''இனியும் மக்கள் பேருந்தை புறக்கணித்தால் இன்னும் குறைய வாய்ப்புண்டு'' என்கிறார் வெங்கடேசன்.

''இரண்டு கேள்விகளுக்கும் பதில் ' ஆம்' என்பதுதான்.'' என பதிவிட்டுள்ளாஎ முத்து செல்வம்.

https://twitter.com/anantha_an/status/957503531723800576

''உண்மையில் மக்களுக்கு உதவுவதற்காகச் செய்யவில்லை.உள்ளாட்சி தேர்தலுக்காக'' என்கிறார் ஜீன் தம்பி.

https://twitter.com/akilan108/status/957514101604757504

''ஏமாற்றுதல்'' என்கிறார் ஸ்டீபன் குமார்.

''கையாலாகாத்தனத்தை வெளிக்காட்டுகின்றது'' என்கிறார் வேலாயுதம்.

https://twitter.com/sathishraj4144/status/957507424264511489

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Tamil Nadu government has decreased the bus fare which it increased recently. But people are still unhappy with the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X