For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யுமாம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிய இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. இதற்குள் பெரிய மழையை எதிர்பார்க்க முடியாது என்று ஏற்கனவே வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்த வருடம் வட கிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை விட 10 சதவீதம் தான் குறைவாக பெய்யும் என்று நீண்ட கால வானிலை அறிக்கை முன்பு அறிவித்தது.

ஆனால் இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கு மேல் குறைவாக பெய்துள்ளது. கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. இதன் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிப்பு ஏற்பட்டது. மின்விநியோகம் இன்னமும் சீரடையவில்லை.

Deep depression in Bay of Bengal

இந்த வருடம் வட கிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை விட 10 சதவீதம் தான் குறைவாக பெய்யும் என்று நீண்ட கால வானிலை அறிக்கை முன்பு அறிவித்தது.

ஆனால் இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கு மேல் குறைவாக பெய்துள்ளது. கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. இதன் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிப்பு ஏற்பட்டது. மின்விநியோகம் இன்னமும் சீரடையவில்லை.

இந்த நிலையில் அந்தமான் அருகே கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. வலுப்பெறவும் இல்லை, வலு இழக்கவும் இல்லை.

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும். கனமழையாக இருக்காது. லேசானது முதல் மிதமழையாக இருக்கும். இன்று சனிக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

English summary
Moderate rains can be expected on 25 - 27 st in coastal belt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X