For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரோம் ஷர்மிளாவை தோற்கடித்ததற்காக மணிப்பூர் மக்கள் வருந்துவார்கள்: தீபா

இரோம் ஷர்மிளாவை தோற்கடித்ததற்காக மணிப்பூர் மக்கள் வருந்துவார்கள் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலர் தீபா கருத்து தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவை தோற்கடித்ததற்காக மக்கள் வருந்துவார்கள் என்று எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா. அண்மையில் தேர்தல் அரசியலில் இரோம் ஷர்மிளா குதித்தார்.

Deepa annoyed over Irom Sharmila's humiliating defeat

ஆனால் அவரது குடும்பத்தினரும் மணிப்பூர் மக்களும் தொடக்கம் முதலே இரோம் ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. தற்போதைய சட்டசபை தேர்தலில் வெறும் 51 வாக்குகளை மட்டுமே இரோம் ஷர்மிளாவுக்கு அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Deepa annoyed over Irom Sharmila's humiliating defeat

தங்களது நலனுக்காக தான் போராடினார் என்பது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்த மக்கள் தந்த தோல்வியால் வருந்தப்போவது இந்த இரும்புப்பெண்மனி இல்லை.

இவரை தோற்கடித்தற்காக ஒவ்வொரு நாளும் மக்கள் வருந்துவார்கள்.

இவ்வாறு தீபா பதிவிட்டுள்ளார்.

English summary
'MGR AMMA DEEPA' Peravai general secretary Deepa feeling annoyed over Irom Sharmila's humiliating defeat in Manipur assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X