For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

25 ஆண்டுகளாக முடிவெடுக்க முடியாத ரஜினி இப்போது எப்படி அரசியலுக்கு வர முடியும்? தீபா

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கருத்துத் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு வர துணிவு வேண்டும் என்றும் 25 ஆண்டுகளாக முடிவு எடுக்க திணறும் நடிகர் ரஜினிகாந்த் எப்படி அரசியலுக்கு வர முடியும்? என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்மொழி, தமிழினம் பற்றி துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அரசியலுக்கு வர துணிவு வேண்டும் என்றும் 25 ஆண்டுகளாக முடிவு எடுக்க திணறுபவர் எப்படி அரசியலுக்கு வர முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 Deepa comments about Rajini

இதுகுறித்து எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில், இந்தியாவிலேயே முதல் முறையாக நடிகர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றதிற்கும் சென்றவர்அண்ணா அவர்களால் இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட மறைந்த S.S.ராஜேந்திரன் ஆவார்.

அதைப்போல இந்தியாவிலேயே நடிகர் நாடாண்டது நம்முடைய புரட்சித்தலைவர் ஆவார். நடிகை அரியணை ஏறியது நம்முடைய புரட்சித்தலைவி அம்மா ஆவார். இவர்களை மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்தார்கள் மக்கள் தலைவர்களாக வலம்வந்தார்கள், ஏனெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகி திராவிட இயக்க சமூக சீர்திருத்த கொள்கைகளை மக்கள் மத்தியில் நாடகம், திரைபடம், வாயிலாக எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை, SSR அறிஞர் அண்ணா எழுதிய பல்வேறு நாடகங்களை சமூக சீர்திருத்த மாநாடுகளில் நடித்து மக்களிடையே செல்வாக்கைப் பெற்றார்.

எம்ஜிஆர் அறிஞர் அண்ணா காலங்களில் திமுக மாநாட்டு மேடைகளில் அட்வகேட் அமரனாக மற்றும் பல்வேறு பாத்திரங்களில் நடித்து மக்கள் திலகமாக மதிக்கப்பட்டார். புரட்சித்தலைவி அம்மா தந்தை பெரியாரிடமே பாராட்டு பெற்று இயக்கத்திற்காக காவேரி தந்த கலைச்செல்வி போன்ற நாடகம், திரைப்படங்களில் நடித்து அறிஞர் அண்ணாவிடம் பாராட்டுப் பெற்று மக்களின் மகத்தான தலைவர்களாக திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்தனர்.

அன்றைக்கு திராவிட இயக்கம் அரசியல் அதிகாரத்துக்கு வரமுடியுமா? என்ற அய்யப்பாடுடன் இருந்த காலத்தில் திரைப்படத் துறையில் ஈட்டிய வருமானத்தை பொது வாழ்க்கைக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்களாக அம்மாவும், புரட்சித்தலைவரும் வாழ்ந்ததால் தான் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களை நாட்டு மக்கள் அங்கீகரித்து சரித்திரப் புகழ்பெற செய்தார்கள்.

அவர்கள் உருவாக்கிய இயக்கம் இன்றும் ஆலமரம் போல் ஆயிரம் ஆண்டுகளானாலும் தொடர்ந்து பட்டுப்போகமல் பயணிக்க பாதை வகுத்து தந்துள்ளார்கள். தற்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருவாரா? வரமாட்டாரா? என்று மிக சிலர் அவ்வபோது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்திய ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்கு சட்டத்தில் தடையில்லை, ஆனால் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எம்ஜிஆர், அம்மா, ஆகியோர்களைத் தவிர தமிழ் மண்ணில் வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை. இனிமேலும் வெற்றி பெற போவதில்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மிகப் பெரும்பாண்மையான மக்களிடையே அதிருப்தி தான் நிலவுகிறது. காரணம் தமிழகத்தில் அவர் வாழ்ந்து கொண்டு, அவரும் அவர் குடும்பமும் முழுமையாக திரைப்படத் துறையில் வருமானம் ஈட்டுகின்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் செயல்பட்டு வருபவர். அவ்வப்போது புனிதமான அரசியல் துறையை ஊறுகாய் போன்று பயன்படுத்த நினைப்பதை மக்கள் ரசிக்கவில்லை. ஆனால் அவர் நடிப்பை ரசிக்கிறார்கள். அரசியலிலும் அவர் ஒரு நிலையான ஆதரவையும் தெரிவிப்பதில்லை.

தற்போது 1996ல் தவறான முடிவெடுத்தேன். அதனால் பலர் அரசியல் ஆதாயம் அடைந்தார்கள். என்று முதலில் நடந்த ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் புலம்புகிறார். முதலில் அரசியலுக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், என்று கூறுவதற்கே முடிவே இல்லாமல் காலம் கடந்துவிட்டது. தற்போது 1996ல் ரஜினி எடுத்த தவறான முடிவு என்ன?

என்பதை வெளிப்படையாக கூறாதது ஏன்? இவரால் அரசியல் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்பதை அறிவிக்க தயாரா? தயங்குவது ஏன்? திமுக, தமாக கூட்டணியைத் தான் ரஜினி கடந்த 1996ல் ஆதரித்தார் என்பது குறிப்பாகும். இந்நிலையில் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று எந்த அளவுகோல் அடிப்படையில் ரஜினிகாந்த் பேசினார்? தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சனையான காவேரி, முல்லைபெரியார், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீதேன் எயிவாயு திட்டம், தமிழ் ஈழப்பிரச்சனை, கெயில் நிர்வாக திட்டம், போன்ற எண்ணற்ற பிரச்சனைகளில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தான் திட்டங்களில் கையெழுத்திடப்பட்டது.

மக்கள் எதிர்க்கும், இந்த நிர்வாக திறமையை பாராட்டுகிறாரா? அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்களால் புறக்கணிப்பட்ட ஒரு செயல் இழந்த தலைவரை ரஜினிகாந்த் பாராட்டுவது உள்நோக்கம் என்ன? இவ்வாறு அந்த அறிக்கையில் தீபா பல்வேறு கேள்விகளை கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
MGR Amma Deepa Peravai head deepa comments about Rajinikanth's political entry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X