For Daily Alerts
Just In
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.. தீபா திட்டவட்டம்!
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தீபா அறிவித்துள்ளார்.
தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா இன்று சந்தித்து பேசினார். ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக சந்தித்ததாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சென்னை ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் கூறினார்.
கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் போட்டியிடுவதாக அறிவித்த அவர், ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.