For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானும் லிஸ்டில் இருக்கேன்.. அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தீபா

மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ், மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து தீபா அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் தேசிய கட்சியின் ஆட்சியை ஒழித்து திராவிட கட்சிகளின் ஆட்சியை ஊன்றி மறைந்த அண்ணாவின் 48வது நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Deepa pays tribute Anna

144 தடை உத்தரவு இருந்த போதிலும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அமைச்சர்கள், நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோன்று திமுக சார்பாக அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களுடன் அமைதி ஊர்வலம் சென்று, அண்ணாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியலுக்கு வர ஆயத்தமாகி வரும் அவரது அண்ணன் மகள் தீபா மெரினாவிற்கு சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

English summary
Jayalalithaa’s niece Deepa paid tributes to Annadurai at Marina today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X