For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளிக்கு புடவை வாங்க போறீங்களா?... கைத்தறி புடவை வாங்குங்க... 30% தள்ளுபடி இருக்கு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருவான்மியூரில் உள்ள, ஸ்ரீவித்யா கல்யாண மகாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தொடங்கி வைத்தார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருவான்மியூரில் உள்ள, ஸ்ரீவித்யா கல்யாண் மகாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனை 15.10.2017 முடிய நடைபெறுகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் இயங்கும் "லூம்வேர்ல்டு" விற்பனை நிலையத்தை மக்களிடையே பிரபலப்படுத்த, அதன் விற்பனையினை மேம்படுத்த ஏதுவாக, மத்திய மற்றும் மாநில அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும்.

திருச்சி கைத்தறி பெருங்குழுமத் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருவான்மியூரில் உள்ள, ஸ்ரீவித்யா கல்யாண் மகாலில் "மாபெரும் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை"03.10.2017 முதல் 15.10.2017 முடிய நடைபெறுகிறது.

இக்கைத்தறி கண்காட்சியினை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன் 03.10.2017 அன்று காலை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

கைத்தறி துணி ரகங்கள்

கைத்தறி துணி ரகங்கள்

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்று பிரசித்தி பெற்ற கைத்தறித் துணி இரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விதம் விதமான சேலைகள்

விதம் விதமான சேலைகள்

கோயம்புத்தூர் மென் பட்டுச் சேலைகள், பரமக்குடி பருத்திச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், விளந்தை சேலைகள், சின்னாளப்பட்டி பருத்திச் சேலைகள், லுங்கிகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி துணி வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி சிறப்பு விற்பனை

கண்காட்சி சிறப்பு விற்பனை


ஈரோடு மாவட்டத்திலிருந்து போர்வைகள், வீட்டு உபயோக துணி வகைகள், துண்டு இரகங்கள், பவானி ஜமக்காளம்,
விற்பனை செய்யப்படுகின்றன. இக்கண்காட்சி 03.10.2017 முதல் 15.10.2017 முடிய தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

30 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி

30 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி

இக்கண்காட்சியில், கைத்தறி துணிகளின் விற்பனைக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் 20ரூ தள்ளுபடியுடன் கூடுதலாக 10ரூ சேர்த்து 30ரூ சிறப்புத் தள்ளுபடி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

English summary
Minister for Handlooms and Textiles OS Manian inaugurated a special Exhibition cum Sales of Handlooms for Deepavali festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X