For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீலகிரியை உலுக்கும் வெள்ளம்.. நீரில் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படும் மான்கள்

மான்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீரில் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படும் மான்கள்-வீடியோ

    ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     மின்கம்பங்கள் சாய்ந்தன

    மின்கம்பங்கள் சாய்ந்தன

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, மேலும் உதகை மற்றும் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளா கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கனமழையால் காரணமாக சாலையில் மரங்கள் விழுந்தன. மின்கம்பங்க ளும் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டன.

     படகுகள் மூலம் மீட்பு

    படகுகள் மூலம் மீட்பு

    நிலம்பூர் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் அவ்வழியாக தமிழ் நாடு கர்நாடக போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் சரக்குகள் ஏற்றிவந்த ஓட்டுநர் மற்றும் லாரிகளில் வந்தவர்களை அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.

     அடித்து செல்லப்பட்ட மான்கள்

    அடித்து செல்லப்பட்ட மான்கள்

    மேலும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பல வீடுகளும் இடிந்து பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நிலம்பூர் பகுதியில் மலைபகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன.

     விடுமுறை அறிவிப்பு

    விடுமுறை அறிவிப்பு

    கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பல ஊர்களில் பெய்து வரும் கனமழை நீரானது நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கனமழை காரணமா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கேரளா அரசு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது

    English summary
    Deer washed away due to flood in Koodalur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X