For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை... கமலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு ஹைகோர்ட் இடைக்கால தடை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் விவகாரம் தொடர்பான, நடிகர் கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

ஜூலை 14ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில், நடிகர் சக்தி, நாதஸ்வரத்தை வீசுவது போல காட்சி இடம் பெற்றது. இதனால் நாதஸ்வரத்தை கடவுளாக மதிக்கும், இசைவேளாளர் சமூகத்தினர் மனது புண்பட்டுவிட்டதாக கூறி, தமிழ்நாடு இசை வேளாளர் நல சங்கம் சார்பில் சென்னை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆகஸ்ட் 21ம் தேதி கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Defamation Proceedings against Kamal Haasan stayed

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன், என்டேமால் இந்தியா பிரைவேட் லிமிட்ட மற்றும் விஜய் டிவி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபபதி எம்.எஸ்.ரமேஷ், கமல் உள்ளிட்டோருக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

English summary
The Madras High Court today stayed criminal defamation proceedings against actor Kamal Haasan, who is also the host of reality television show Bigg Boss, for allegedly degrading a particular community in the July 14 episode of the show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X