For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரியம் இல்லை.. மூர்க்கத்தனம் இல்லை.. தெளிவு இல்லை.. காங்கிரஸை வெளுத்த மாணவர்.. ஒப்புகொண்ட குஷ்பு!

காங்கிரஸ் தோல்வி குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    what happened to congress?

    சென்னை: "அரசியல் என்பது 24/7 நேரத்துக்கான பணி... ஆனால் உங்கள் கட்சிக்கு மூர்க்கத்தனம் இல்லை, வீரியமான செயல்பாடு இல்லை, தெளிவான பார்வையும் இல்லை" என ட்விட்டரில் சரமாரியாக விமர்சித்த ட்விட்டர்வாசிக்கு, ஒத்த வார்த்தையில் "ஒப்புக் கொள்கிறேன்" என்று பதிலளித்து அதிர வைத்துள்ளார் குஷ்பு.. மேலும், "இப்போது இல்லையென்றால் வேறு எப்போதுமே முடியாது.. எல்லா விஷயங்களையும் சரி செய்யணும்... வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளார்கள்" என்றும் காங்கிரஸ் தோல்வி குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

    சொல்ல முடியாத வேதனையில் உள்ளது டெல்லி காங்கிரஸ்.. ஒரு தொகுதியில்கூட முன்னணி இல்லை.. மிக மிக மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது.

    இப்படி படுதோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது... எப்படி மீண்டும் எழப்போகிறோமோ.. கட்சியை பழையபடி டெல்லியில் நிறுத்த போகிறோமோ என்ற கவலையும் சூழ்ந்து கொண்டுள்ளது.

    சிவந்த கண்கள்.. குங்குமம்.. பதட்டத்தோடு வந்த சிசோடியா.. துணை முதல்வரே நடுங்கிப் போன அந்த நொடி!சிவந்த கண்கள்.. குங்குமம்.. பதட்டத்தோடு வந்த சிசோடியா.. துணை முதல்வரே நடுங்கிப் போன அந்த நொடி!

    வேதனை கருத்து

    வேதனை கருத்து

    இதனிடையே அதிர்ச்சி தோல்வி குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வேதனை கலந்த கருத்தினை ட்வீட் மூலம் பதிவிட்டுள்ளார். அதில், "காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் நாங்கள் டெல்லியில் எதிர்பார்க்கவில்லை. திரும்பவும் நசுக்கப்பட்டுவிட்டது... போதுமானதை நாம் செய்கிறோமா, சரியானதை செய்கிறோமா, சரியான பாதையில் தான் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் வரும்!

    ஆபத்து

    ஆனால், இப்போதே நாம் பணியை ஆரம்பிக்க வேண்டும்... இப்போது இல்லையென்றால் வேறு எப்போதுமே முடியாது... அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எல்லா விஷயங்களையும் சரி செய்ய வேண்டும்... ஆனால் ஒன்று, வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளார்கள்.. இது மகிழ்ச்சி தருகிறது" என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு!!

    சரமாரி விமர்சனம்

    குஷ்புவின் வேதனை மிகுந்த இந்த ட்வீட்டுக்கு மாணவர் ஒருவர் பதிவு செய்த கமெண்ட்டில், "அரசியல் என்பது 24/7 நேரத்துக்கான பணி... ஆனால் உங்கள் கட்சிக்கு மூர்க்கத்தனம் இல்லை, வீரியமான செயல்பாடு இல்லை, தெளிவான பார்வையும் இல்லை" என்று சரமாரியாக விமர்சித்தார்.

    ஒப்புக் கொள்கிறேன்

    ஒப்புக் கொள்கிறேன்

    ஆனால் இதற்கும் குஷ்பு பதிலளித்துள்ளார்.. அதுவும் ஒத்த வார்த்தையில் "ஒப்புக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்!!! குஷ்புவின் இந்த பதிலில் பல அர்த்தங்கள் பொதிந்து உள்ளதாக தெரிகிறது.. கண்டிப்பாக தங்களது கட்சியின் அடி மட்டத்தில் இருந்து மாற்றம் தேவை என்பதை உணர்ந்தே உள்ளார்.. "ஒப்புக் கொள்கிறேன்" என்ற வார்த்தையில் கட்சியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது என்பதையும் வெளிப்படையாகவே சொல்லி அதிர வைத்துள்ளார் குஷ்பு.

    English summary
    Delhi Assembly Election Result: kushboos reply about congress defeat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X