For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் தோற்றீங்க.. 13ம் தேதி தமிழக பாஜக நிர்வாகிகளை கேள்விகளால் துளைக்கப் போகும் டெல்லி மேலிடம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் முடிவு எதிரொலி... அதிமுக, பாஜகவில் சலசலப்பு

    சென்னை: தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து டெல்லி பாஜக மேலிடம் வரும் 13ம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்போது தமிழிசை, சிபிராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய ஐந்து பேரும் தோற்றுப்போனதற்கான காரணங்களை தமிழக பாஜக தலைமை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது.

    அதிமுக கூட்டணியில் கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 5 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன.

     ச்சை! பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா.. கஸ்தூரியின் காரசார ட்வீட் ச்சை! பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா.. கஸ்தூரியின் காரசார ட்வீட்

    அதிமுக ஒன்றில் வெற்றி

    அதிமுக ஒன்றில் வெற்றி

    இந்த ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்தது. இதேபோல் அதிமுக உள்பட மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். தேனியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

    பாஜக அதிர்ச்சி

    பாஜக அதிர்ச்சி

    தமிழகத்தில் தோற்றபோதிலும் மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதேநேரம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு இருந்தும் தமிழகத்தில் தோற்றது ஏன் என்பது தெரியாமல் டெல்லி பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது.

    உறுதியாக இருக்கும் பாஜக

    உறுதியாக இருக்கும் பாஜக

    தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் பாஜக தலைமை, எப்படியாவது தமிழகத்தில் காவி கொடி பறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டும் வருகிறது.

    தமிழகம் குறித்து ஆய்வு

    தமிழகம் குறித்து ஆய்வு

    ஆனால் பாஜகவின் கூட்டணி முயற்சிக்கு தமிழகத்தில் சுத்தமாக வரவேற்பு இல்லாமல் போனது ஏன் என்பதை அறிந்து மாற்று முயற்சிகளில் இறங்க பாஜக விரும்புகிறது. இதற்காக தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழக மாநில பாஜக தலைமை நிர்வாகிகளிடம் வரும் 13ம் தேதி ஆய்வு நடத்த உள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் தில்லி சென்று பங்கேற்க உள்ளார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில், தமிழகத்தில் தோல்விக்கான காரணிகள், கட்சியை பலப்படுத்த என்னென்ன பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.

    English summary
    delhi bjp head team enquiry to tn bjp leaders over big defeat in lok sabha polls at tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X