For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கிய விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் அண்மையில் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்கு வழங்கியது. இதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Delhi High Court has issued a notice to the Election Commission in the case against the double leaf symbol

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது. மேலும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

மேலும் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும், சின்னம் தொடர்பாக இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தினகரன் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக டெல்லி ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது தொப்பி சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பான வழக்கை மட்டும் நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

மேலும் இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த மனுவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் பதில் அளிக்க வேண்டும் என்றும் டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கை வரும் பிப்ரவரி 16-ம் தேதிக்கு டெல்லி ஹைகோர்ட் ஒத்திவைத்தது.

English summary
The Delhi High Court has issued a notice to the Election Commission in the case against the double leaf symbol. TTV Dinakaran filed case against double leaf symbol is alotted for OPS and EPS team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X