For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன ஆளைக் காணோமே.. டெல்லி மெட்ரோவில் ஏறினா டிரைவரைத் தேடாதீங்க சார்!

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி மெட்ரோவின் ஓட்டுநர் இல்லா புதிய ரயில்களின் சோதனை ஓட்டம் டெல்லியின் முகுந்த்பூரில் நடைபெற்று வருகின்றது.

6 பெட்டிகளுக்கு மேல் கொண்ட இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் தென்கொரியாவிலிருந்து வந்தது. 2016 ஆம் ஆண்டு இறுதியில் டெல்லியில் இது ஓடத்தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 5 ரயில்கள் வந்தடைந்துள்ள நிலையில் மேலும் மூன்று இந்த வருடம் பிப்ரவரியில் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஓட்டுநர்கள்:

முதலில் ஓட்டுநர்கள்:

டெல்லி மெட்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்த ரயில்கள் முழுதும் கட்டுப்படுத்தப்படும். தொடக்கத்தில் ரயில் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவார்கள், ஆனால் போகப்போக ஓட்டுநர்கள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள்.

கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்:

கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்:

பின்னர், ரயிலின் முழு இயக்கமும் மையக் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படும். தற்போது அதற்கான சிக்னலிங், பிட்டிங் ஆகியவை பேஸ்-3 நிலையில் சோதிக்கப்பட்டு வருகின்றன.

மணிக்கு 85 கிலோ மீட்டர்:

மணிக்கு 85 கிலோ மீட்டர்:

இந்த ரயில்கள் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும். மேலும் சராசரி வேகம் 35 கிமீக்கும் சற்று கூடுதலாகச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2000 பேருக்கு மேல் பயணிக்கலாம்:

2000 பேருக்கு மேல் பயணிக்கலாம்:

ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 380 பயணிகளுடன் மொத்தம் 2,280 பயணிகள் இதில் பிரயாணிக்கலாம். சிசிடிவி காமராக்கள் பொருத்தப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
for the past month, Delhi Metro has been quietly testing trains at its Mukundpur depot in the northern part of the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X